விஜய்யின் புதிய அரசியல் கட்சிக்கு நடிகர் வடிவேலு கொடுத்த ரியாக்ஷன் என்ன?
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தொடங்கிய கட்சி குறித்து நடிகர் வடிவேலு கருத்து தெரிவித்துள்ளார்.
விஜயின் புதிய கட்சி
தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி பல ஆண்டுகளாக இருந்தது.
இந்நிலையில் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் பிரமுகர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
வடிவேலு கூறியது என்ன?
நடிகர் வடிவேலு நேற்று ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்தார். பின்னர் அம்பாளை தரிசனம் செய்து விட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “தனது தாய் மறைந்து ஒரு வருடம் கடந்த நிலையில் அவருக்கு மோட்ச தீபம் ஏற்றுவதற்காக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு வந்திருக்கிறேன்” எனக் கூறினார்.
மேலும் அவரிடம் விஜய் தொடங்கிய அரசியல் கட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அவ்வளவுதான், இங்க வா” என அந்தக் கேள்வியைத் தவிர்க்கும்படி பேசியுள்ளார்.