இன்றைய முட்டை விலை நிலவரம் என்ன?
தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் முட்டை உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் ஆனது நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முட்டை விற்பனை தொடர்பாக பண்ணையாளா்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. ஹைதராபாத் உள்ளிட்ட பிற மண்டலங்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே பண்ணைக் கொள்முதல் விலையில் சற்று மாற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து முட்டை விலை 10 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 5.40-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்று பல்லடத்தில் நடைபெற்றது. இதில் கறிக்கோழி விலை கிலோ ரூ.122 ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 69-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. பண்ணைக் கொள்முதல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் முட்டையின் விலையில் மாற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.