உப்பு தண்ணீரில் காரை கழுவதற்கும் நல்ல தண்ணீரில் காரை கழுவதற்கும் என்ன வித்தியாசம்?

பெங்களூருவில் குடிநீரில் கார்களை கழுவ கூடாது என தற்போது அந்நகர குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பெங்களூர் நகரில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சம் காரணமாக இந்த உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். கார் கழுவும் போது உண்மையில் நல்ல தண்ணீரில் கார் கழுவதற்கும் உப்பு தண்ணீரில் கார் கழுவுவதற்கும் என்ன வித்தியாசம் என்பதை தான் இங்கே காணப் போகிறோம்.

பெங்களூர் நகரில் தற்போது குடிநீர் பஞ்சத்திற்கான அறிகுறி தென்பட்டுள்ள நிலையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தற்போது பெங்களூர் நகரில் கார் கழுவுவது செடிக்கு தண்ணீர் ஊற்றுவது கட்டுமான வேலைக்காக பயன்படுத்தும் நீர் ஆகியவற்றில் குடிநீரை பயன்படுத்தக் கூடாது என்றும் உப்பு தண்ணீரை தான் பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மீறுபவர்களுக்கு ரூபாய் 5000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மக்கள் பலர் நல்ல தண்ணீரில் காரை கழுவினால் தான் கார் முழுமையாக சுத்தமாகும் என்றும், உப்பு தண்ணீரில் காரை கழுவினால் கார் முழுமையாக சுத்தமாகாது என்றும், நம்பி வருகிறார்கள். உண்மையிலேயே நல்ல தண்ணீரில் காரை கழுவினால் தான் கார் சுத்தமாகுமா? உப்பு தண்ணீருக்கும், நல்ல தண்ணீருக்கும், கார் சுத்தமாவதற்கும் என்ன தொடர்பு என்பதை தான் விரிவாக காணப்போகிறோம்.

பொதுவாக உப்புதண்ணீரில் காரை கழுவும் போது காரை கழுவியப்பின்பு ஆங்காங்கே புள்ளி புள்ளியாக அடையாளங்கள் இருப்பது தான் மக்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இந்த பிரச்சினை நல்ல தண்ணீரில் காரை கழுவினால் வராது என சிலர் கருதி வருகிறார்கள். இது முற்றிலும் தவறான விஷயமாகும். நல்ல தண்ணீரில் காரை கழுவினாலும் சரி உப்பு தண்ணீரில் காரை கழுவினாலும் சரி, சரியான முறையை பின்பற்றாவிட்டால் இப்படியான ஸ்பார்ட்டுகள் வரத்தான் செய்யும்.

இந்த புள்ளிகள் ஏன் வருகிறது? என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். காரை கழுவிய பின்பு ஆங்காங்கே சொட்டு சொட்டாக நீர்துளிகள் தேங்கி நிற்கும். பின்னர் அது அதிக வெயில் மற்றும் வெப்பம் காரணமாக காற்றுடன் கலந்து விடும். அப்பொழுது நீர் மட்டுமே காற்றுடன் கலக்கும். நீருடன் கலந்திருக்கும் மற்ற கெமிக்கல்கள் காற்றுடன் கலக்காமல் நேரடியாக அந்த சொட்டு தேங்கி இருந்த இடத்திலேயே இருந்துவிடும். இதுதான் புள்ளி புள்ளியாக தெரிகிறது.

உப்பு தண்ணீரில் காரை கழுவும் போது உப்பு தண்ணீரில் அதிக அளவிலான மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகிய வேதிப்பொருட்கள் இருக்கிறது. இது காரில் புள்ளி புள்ளியாக பெரிய அளவில் வெளியே தெரியும் படி உருவாகும். நல்ல தண்ணீரில் இந்த கெமிக்கலின் அளவு குறைவு என்பதால் இந்த புள்ளி புள்ளியாக உருவாவது பெரிய அளவில் வெளியே தெரியாது. ஆனால் நிச்சயம் சிறிய அளவில் இருக்கத்தான் செய்யும்.

இதை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்றால் காரை தண்ணீர் ஊற்றி கழுவிய பின்பு ஒரு சுத்தமான துணியை வைத்து முழு தண்ணீரையும் துடைத்து விடுவது தான் சிறந்தது. காரின் முழு தண்ணீரையும் துடைத்து விட்டால் இதுபோன்று புள்ளி புள்ளியாக வருவதை தவிர்க்க முடியும். நல்ல தண்ணீரில் கழுவினாலும் சரி, உப்பு தண்ணீரில் கழுவினாலும் சரி, இப்படியாக துணியை வைத்து துடைப்பது தான் நல்ல ஐடியா.

நல்ல தண்ணீரிலும் சரி, உப்பு தண்ணீரும் சரி, வேதிப்பொருட்களின் கலவை இருக்கத்தான் செய்யும். நல்ல தண்ணிருக்கும், உப்பு தண்ணீருக்கும் இந்த கலவையின் அளவு தான் மாறுபடுமே தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை. நீங்கள் நல்ல தண்ணீரில் கழுவி விட்டு துணியால் துடைக்காமல் இருந்தால் இது போன்ற புள்ளி ஏற்படுவதை காண முடியும்.

உப்பு தண்ணீரை பயன்படுத்தி காரை கழுவும் போது கார் சுத்தமான உடன் தண்ணீரை முழுமையாக துடைத்து விடுவது தான் நல்லது. தண்ணீரில் உள்ள வேதிப்பொருட்கள் காரின் மேல் பரப்பிலிருந்து கெமிக்கல் ரியாக்ஷனாகி காரின் அழகை கெடுக்க வாய்ப்பு இருக்கிறது. நாட்கள் ஆக ஆக காரின் கலர் மங்கி போவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்க வாய்ப்புள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *