வெளிநாட்டுகாரங்களுக்கு கேடிஎம் பைக் அப்படி மீது என்ன வெறுப்பு? ஷோரூம்ல ஈ, காக்கா கூட வரது கிடையாதாம்!
கேடிஎம் நிறுவனத்தின் பைக்குகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த ஏற்றுமதி என்பது மிகப் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என நமக்கு தகவலாக கிடைத்துள்ளது. கேடிஎம் நிறுவனத்தின் அனைத்து மாடல் பைக்குகளும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதற்கான காரணம் என்ன என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
வெளிநாடுகளில் கடந்த ஜனவரி மாதம் கேடிஎம் பைக் மீதான மோகம் மிகவும் குறைந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் கேடிஎம் பைக்குகளில் ஏற்றுமதி என்பது கடந்த ஜனவரி மாதம் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிறுவனம் மொத்தமாக 6714 வாகனங்களை கடந்த ஜனவரி மாதம் ஏற்றுமதி செய்துள்ளன. இது கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்றுமதி நடந்த 7,002 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும்போது 4.11 சதவீதம் விற்பனை சரிவாகும்.
இதுவே கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மொத்தம் 10,917 என்ற எண்ணிக்கையில் ஏற்றுமதியாகி இருந்தது. இத்துடன் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஏற்றுமதியை ஒப்பிடும்போது 38.50 சதவீதம் ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளது. இந்த சரிவுக்கான காரணம் என்ன? ஒவ்வொரு மாடலிலும் என்ன வகையான சரிவுகள் ஏற்பட்டுள்ளன என்ற விவரங்களை காணலாம்.
கேடிஎம் 390: கேடிஎம் நிறுவனத்தின் 390 பைக்குகள் சர்வதேச மார்க்கெட்டில் நல்ல டிமாண்ட் ஏற்படுத்தியுள்ள பைக்குகள்தான். இந்த பைக்குகள் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 3,210 என்ற எண்ணிக்கையில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகி உள்ளன. கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாத ஏற்றுமதியான 4364 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 24.44% விற்பனை வீழ்ச்சியாகும். கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாத ஏற்றுமதியான 4780 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 38.85% ஏற்றுமதி வீழ்ச்சியாகும்.
கேடிஎம் 390 ரேஞ்ச் பைக்குகளில் புதிய 390 அட்வெஞ்சர் பைக் அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது. இந்த பைக் 2024-ம் ஆண்டு எக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து 2025-ம் ஆண்டு இது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது சரிவு ஏற்பட்டுள்ள இந்த செக்மென்ட் விரைவில் எழுச்சியை சந்திக்கும் என எதிர்பார்க்கலாம்.
கேடிஎம் 125 மற்றும் 250: கேடிஎம் நிறுவனத்தின் 125 ரக பைக்குகளை பொருத்தவரை கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 1731 பைக்குகள் ஏற்றுமதியாகியிருந்தன. இதுவே 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2018 பைக்கில் ஏற்றுமதியாகிறது. தற்போது 457 பைக் குறைவாக ஏற்றுமதியாகி 20.89சதவீத விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2498 பைக்குகள் ஏற்றுமதி ஆகி இருந்தன இதை ஒப்பிடும்போது 30.70% வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கேடிஎம் 200 பைக்கை பொருத்தவரை கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 219 பைக்குகள் தான் ஏற்றுமதியாகி உள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 42 பைக்குகள் தான் ஏற்றுமதியாகியிருந்தது அதை ஒப்பிடும்போது 1611.9% விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுவே கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாத ஏற்றுமதியான 1909 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும்போது 62.34% ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கேடிஎம் நிறுவனத்தின் இந்த ஏற்றுமதி என்பது கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஏற்றுமதியை ஒப்பிடும்போது இரண்டு செக்மெண்ட்கள் மட்டும் ஏற்றுமதியில் வளர்ச்சியை சந்தித்துள்ளன. ஒட்டுமொத்தமாக ஏற்றுமதியில் வீழ்ச்சிதான் ஏற்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது அனைத்து செக்மெண்டிலும் வீழ்ச்சியை சந்தித்து தற்போது ஏற்றுமதியில் இந்நிறுவனம் தடுமாறி வருகிறது.