உங்க ராசிக்கு இந்த வாரம் என்ன பலன்.. மார்ச் 11 முதல் 17 வரையிலான ராசிபலன்கள்!

மேஷம்:

வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே உங்கள் கனவுகள் நினைவாகி வருவதை நீங்கள் பார்க்க முடியும். கடின உழைப்புக்கான பலன்களை நீங்கள் அடைவது உங்கள் உற்சாகத்தை மேம்படுத்தும். வணிகத்தில் லாபம் கிடைக்கும் மற்றும் வணிகத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண் – 10

அதிர்ஷ்ட நிறம் – பர்பிள்

ரிஷபம்:

சில நேரம் மகிழ்ச்சியும், சில சமயம் சோகமும் நிறைந்ததாக இந்த வாரம் இருக்கும். குடும்ப பிரச்சினைகள் குறித்து நீங்கள் மிகுந்த கவலை அடைவீர்கள். மூதாதையர் சொத்து தொடர்பாக பிரச்சனை அதிகரிக்கும். இதற்கு நீதிமன்றத்தை நாடுவதை விடுத்து பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண்பது நல்லது. வணிகத்தில் சவாலான முதலீடுகளை செய்ய வேண்டாம்.

அதிர்ஷ்ட எண் – 4

அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை

மிதுனம்:

இந்த வாரத்தில் மிகப்பெரிய துன்பம் உங்களுக்கு ஏற்பட்டாலும், அது நல்ல வாய்ப்பாக மாறும். பணியிடத்தில் உங்களுக்கு முக்கியமான பொறுப்பு காத்திருக்கிறது. உயர் கல்வி படிக்க வேண்டும் அல்லது வெளிநாட்டில் கல்வி பயில வேண்டும் என்று விரும்பும் மாணவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். பணத்தை கையாளும் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட எண் – 15

அதிர்ஷ்ட நிறம் – பிரவுன்

கடகம்:

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் தடைகளால் மிகுந்த மனக்கவலை அடைவீர்கள். வீட்டை சீரமைக்க நீங்கள் அதிகமான பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். செலவுகள் அதிகரித்தாலும் கூடுதல் வருமானம் இருக்கும். பெரிய பதவி அல்லது பொறுப்பை அடைய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு பொறுமையாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண் – 6

அதிர்ஷ்ட நிறம் – தங்கம்

சிம்மம்:

செல்வாக்கு மிகுந்த நபர் ஒருவரை சந்திப்பீர்கள். அது உங்களுக்கு எதிர்காலத்தில் பலன் தருவதாக அமையும். பணியிடத்தில் உங்கள் மூத்த அதிகாரிகளின் ஆசிர்வாதம் கிடைக்கும் மற்றும் ஜூனியர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். வேலையை மாற்றிக்கொள்ள விரும்பும் நபர்களுக்கு விரும்பிய வாய்ப்பு கிடைக்கும். மாபெரும் ஒப்பந்தங்கள் பலன் தருவதாக அமையும்.

அதிர்ஷ்ட எண் – 1

அதிர்ஷ்ட நிறம் – மெரூன்

கன்னி:

பணியிடத்தில் நீங்கள் மிக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இது மட்டுமல்லாமல் நீங்கள் என்ன வேலை செய்தாலும் மிக கடினமாக முயற்சி செய்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். தற்போது செய்யப்படும் முதலீடுகளுக்கு எதிர்காலத்தில் லாபம் கிடைக்கும் என்றாலும் சவால் மிகுந்த முதலீடுகளை செய்ய வேண்டாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நீடிக்கும்.

அதிர்ஷ்ட எண் – 11

அதிர்ஷ்ட நிறம் – வயலெட்

துலாம்:

இந்த வாரம் மிகுதியான குதூகலம் ஏற்படும். அந்த சமயத்தில் உங்கள் சுய நினைவை இழந்து விடாதீர்கள். உங்கள் பேச்சிலும், நடத்தையிலும் கட்டுப்பாடு தேவை. எந்த வேலையையும் நாளைக்கு என்று சொல்லி ஒத்தி வைக்க வேண்டாம். பணியிடத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகளை உங்கள் எதிரிகளிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லவும்.

அதிர்ஷ்ட எண் – 3

அதிர்ஷ்ட நிறம் – சில்வர்

விருச்சிகம்:

இந்த வாரத் தொடக்கத்தில் அலுவலக பணிச்சுமை அதிகரிக்கலாம். அவற்றை நிறைவு செய்ய உங்களுக்கு கூடுதல் நேரம் தேவைப்படும். அதேசமயம் பணியிடத்தில் உங்களுக்கு தடைகளை ஏற்படுத்தும் நபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். வணிகம் செய்யும் நபர்களுக்கு போட்டியாளர்களிடம் இருந்து கடுமையான போட்டி நிலவும். பார்ட்னர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.

அதிர்ஷ்ட எண் – 9

அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு

தனுசு:

வெற்றி பெற வேண்டுமென்றால் பணம் மற்றும் நேர விவகாரங்களில் மேலாண்மை செய்யத் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் சமூக சேவைக்கான அங்கீகாரம் கிடைக்கும். ஆன்மீக நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பணியாளர்களுக்கு அலுவலகத்தில் சீனியர்கள் மற்றும் ஜூனியர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் – 12

அதிர்ஷ்ட நிறம் – நீலம்

மகரம்:

உங்கள் வேலை அல்லது வணிகம் தொடர்பான நல்ல செய்தி வந்து சேரும். இதனால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். வெளிநாட்டில் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கான தடைகள் நீங்கும். நீதிமன்ற வழக்குகளில் உத்தரவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் – 8

அதிர்ஷ்ட நிறம் – பச்சை

கும்பம்:

செல்வாக்கு மிகுந்த நபரை நீங்கள் சந்திப்பீர்கள். அவர் மூலமாக எதிர்காலத்தில் பலன் கிடைக்கத் தகுந்த முதலீடுகளை இப்போது செய்வீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு அல்லது மிகப்பெரிய பொறுப்பு கிடைக்கலாம். இந்த சமயத்தில் நீங்கள் செய்யும் அனைத்து முதலீடுகளிலும் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் – 7

அதிர்ஷ்ட நிறம் – கிரே

மீனம்:

குறுகிய லாபத்தை மனதில் வைத்து பெரிய நஷ்டத்தை சந்தித்து விடாதீர்கள். உங்களுக்கு பெரிய தொந்தரவு கொடுக்கக்கூடிய நபர்களிடமிருந்து விலகி இருக்கவும். உணர்ச்சி மிகுதியில் பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றினால் பலன் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான அனுபவம் மேலோங்கும்.

அதிர்ஷ்ட எண் – 2

அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *