மேக் இன் இந்தியா என்னமா வேலை செய்யுது.. அமெரிக்கப் ‘பிக்’ நிறுவனம் எடுத்த முக்கிய முடிவு..!
அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் சீனா உடனான வர்த்தகத்தை வேகமாகக் குறைத்து வரும் வேளையில் இந்தியா முக்கியச் சப்ளையராக மாறியுள்ளது.இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டில் வால்மார்ட் இந்தியாவில் இருந்து 10 பில்லியன் டாலர் பொருட்களை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது என மூத்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வால்மார்ட் இந்தியாவில் இருந்து வாங்கும் பொருட்களில் பெரும் பகுதி பொம்மைகள் என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் சமீபத்தில் 100 இந்திய பொம்மை தயாரிப்பு நிறுவனங்களிடம் ஒரு வொர்க்ஷாப் நடத்தியது. இந்த வொர்க் ஷாப் மூலம் அவர்களுடன் கூட்டணி வைத்து இந்தியா – அமெரிக்கா மத்தியில் தனது பொம்மை வர்த்தகத்திற்கான சப்ளை செயின்-ஐ உருவாக்கும் முயற்சியில் இறங்கியது என மத்திய அரசின் DPIIT துறையின் துணை செயலாளர் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் பொருளாதாரத்தை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மூலம் மேம்படுத்த வேண்டும் என்பதை முக்கிய இலக்காகக் கொண்டு மத்திய அரசு மேக் இன் இந்தியா பிரச்சாரத்தின் மூலம் உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்களை இந்தியாவுக்கு அழைத்து உற்பத்தி தளத்தை அமைக்க ஊக்குவித்தது.மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவில் அதிகம் இறக்குமதி பொருட்கள், ஆனால் அதை இந்தியாவிலேயே தயாரிக்கக் கூடிய திறன் கொண்ட பிரிவை முதலில் டார்கெட் செய்யப்பட்டது. அப்படி முதலில் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட துறை பொம்பை தயாரிப்பு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சீப் பிளாஸ்டிக் பொருட்களைக் குறைக்கும் பொறுத்துப் பொம்பை தயாரிப்பை ஊக்கப்படுத்தப்பட்டது.இதன் வாயிலாக உள்நாட்டு நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் புதிய உற்பத்தி தளத்தை அமைத்தது, இதன் வாயிலாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மை இறக்குமதி குறையத் துவங்கியது மட்டும் அல்லமல்ல தற்போது ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியா உயர்ந்துள்ளது.இதற்கு முக்கியமான உதாரணம் அமெரிக்காவிலேயே மிகப்பெரிய ரீடைல் விற்பனை நிறுவனமாக இருக்கும் வால்மார்ட் இந்தியாவில் இருந்து அதிகப்படியான பொருட்களைக் கடந்த சில ஆண்டுகளாக வாங்கி வரும் வேளையில் இந்த ஆண்டு 10 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியாவில் இருந்து பெற முடிவு செய்துள்ளது தான். இதில் பெரும் பகுதி பொம்மைகள் என்பது குறிப்பிடத்தக்கது.ஐகியா போன்ற பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் இருந்து பல்வேறு பிரிவுகளில் பொம்மைகளை இந்தியாவில் இருந்து வாங்கி வெளிநாட்டில் விற்று வருகின்றனர். இதன் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகள் தற்போது அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகில் பெரும்பாலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.