கேப்டன் விஜயகாந்த் மரணத்திற்கு என்ன காரணம்.? சந்தேகம் கிளப்பிய எஸ்.ஏ.சந்திரசேகர்.!!
நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் விஜயகாந்தை வைத்து 17 படங்களை இயக்கியவரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தேகம் ஒன்றை கிளப்பியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் ஆபரேஷனுக்குப் பிறகு அவரது சிகிச்சை முறையாக இருந்ததா என எனக்குத் தெரியவில்லை.
ஏனென்றால், அவ்வளவு எளிதாகத் தளர்ந்துவிடும் உடம்பு அல்ல அவருக்கு என கூறியுள்ளார். மேலும் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து நடக்க வேண்டியது தற்போதே நடந்துவிட்டது என வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் நெருக்கமானவர்களை சந்திக்க விட்டுருந்தாலே சீக்கிரமாக குணமாகியிருப்பார் என கூறியுள்ளார்.