விவசாயிகளுக்கு 16வது தவணை பணம் எப்போது?
இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டத்தின் மூலமாக வருடத்திற்கு மூன்று தவணைகளில் ரூ. 6000 பணம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரையிலும் விவசாயிகளுக்கு 15 தவணைக்கான பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், PM கிசான் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ. 8000 ஆக உயர்த்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நவம்பர் 15, 2023 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 15வது தவணை ரூ.2,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 16வது தவணை எப்போது செலுத்தப்படும் என்று விவசாயிகள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் பிஎம் கிசான் திட்டத்தின் 16வது தவணை வரும் பிப்ரவரி 15, 2024 அன்று விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் தகவல் பரவி வருகிறது.
இந்த உதவித்தொகையை பெறுவதற்கு விவசாயிகள் கட்டாயமாக KYC முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேஒய்சி முடிக்காத விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.