அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா எப்போது?
அயோத்தியில் ராமர் சிலையின் ‘பிரதிஷ்டை விழா ஜனவரி 22, 2024 அன்று மதியம் 12:20 மணிக்கு நடைபெற உள்ளது. ராமர் கோவில் நிகழ்வில் 1,500-1,600 “சிறந்த” விருந்தினர்கள் உட்பட சுமார் 8,000 அழைப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
நிகழ்வில் யார் உரையாற்றுவார்கள்?
கோவில் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் மோகன் பகவத் ஆகியோர் பேச உள்ளனர்.
நிகழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் யார்?
ராமர் கோவில் அறக்கட்டளை இந்த மாபெரும் நிகழ்வுக்கு அனைத்து முன்னாள் பிரதமர்கள், அனைத்து தேசிய கட்சி தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி, தலாய் லாமா மற்றும் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மாதுரி தீட்சித், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு பாஜக பிரமுகர்களான எல் கே அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களான உமாபாரதி மற்றும் வினய் கட்டியார் ஆகியோருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கிடையில், ஒரு சில எதிர்க்கட்சித் தலைவர்கள் விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பை நிராகரித்ததால், “ராமரால் அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே வருவார்கள்” என்று பாஜக பதிலளித்தது.
கோவில் நிகழ்வு தவிர பிரதமர் மோடியின் பயணம் என்ன?
பிரதமர் மோடி டிசம்பர் 30-ம் தேதி கோவில் நகருக்கு வர உள்ளார். மோடி தனது பயணத்தின் போது, மறுவடிவமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையம் மற்றும் புதிய விமான நிலையத்தை திறந்து வைப்பார், மேலும் ஒரு பேரணியில் உரையாற்றுவார் என்று அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர்.
பிரதமரின் பொதுக் கூட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து 1.5 முதல் 2 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உ.பி அரசின் கூற்றுப்படி, அயோத்தியில் தற்போது 37 துறைகளுடன் இணைந்து ரூ.30,923 கோடி மதிப்பிலான 200க்கும் மேற்பட்ட திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சஹாதத்கஞ்ச் மற்றும் நயா காட் ஆகியவற்றை இணைக்கும் 13-கிமீ நீளமுள்ள மறுவடிவமைப்புச் சாலைக்கு இப்போது பெயர் சூட்டப்பட்ட ‘ராம் பாதை’யில் அதிக எண்ணிக்கையிலான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிர்லா தர்மஷாலா முதல் நயா காட் வரை தற்போது காவி கொடிகள், ராமர் படங்கள், ராம் தர்பார் மற்றும் வரவிருக்கும் ராமர் கோவிலின் கலைப் படங்கள் ஆகியவற்றைக் கொண்ட காவி கொடிகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் உள்ளனர்.
“ஜனவரி 22 அன்று பெரிய நாளுக்காக” நகரத்தை அலங்கரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த கருப்பொருள் கலைப்படைப்புகள் செய்யப்பட்டுள்ளன என்று உத்தரபிரதேச அரசாங்கத்தின் பொதுப்பணித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோவிலுக்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டுள்ளது?
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை 2020 பிப்ரவரி 5 முதல் 2023 மார்ச் 31 வரை ராமர் கோயில் கட்ட 900 கோடி ரூபாய் செலவிட்டதாக அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 22ஆம் தேதி, அழைப்புக் கடிதம் உள்ளவர்கள் அல்லது அரசுப் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் மட்டுமே அயோத்திக்கு வர முடியும்.