குழந்தை பிறந்ததும்.. கணவர்களே.. கண்டிப்பா இதை கவனிங்க..!

பிரசவம் என்பது மறு ஜென்மம் என்பார்கள். பிரசவ வலியும் தாங்க முடியாததாகும். சுகப்பிரசவம், சிசேரியன் இரண்டுமே ஒரு பெண்ணுக்கு கடினம் தான்.

பிறந்த குழந்தையை பாராட்டி, சீராட்டி கவனிக்கும் நாம், அதைப் பெற்றுக் கொடுத்த அன்னையையும் நன்கு கவனித்துக் கொள்வது அவசியம்.

தாங்க முடியாத வலி, உதிரப்போக்கு, உடம்பில் ஏற்படும் மாற்றங்கள், ஹார்மோன் மாற்றங்கள் என்று பலவற்றை அந்த பெண் சந்தித்திருப்பார். அவரது உடலுக்கும், மனதுக்கும் மிகுந்த அக்கறையும், கவனிப்பும் தேவை.

மருத்துவரின் ஆலோசனைப்படி இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை அந்த பெண்ணுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அன்பான வார்த்தைகள், பாராட்டுக்கள், சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம் அவர்களது மனதிற்கும் மகிழ்ச்சியை கொடுக்கலாம். குழந்தையை பராமரிப்பதில் உதவிகள் செய்வது மிகவும் முக்கியம். சத்தான உணவும், போதிய அளவு ஓய்வும் அந்தப் பெண்ணை வெகுவிரைவில் குணப்படுத்தும்.

தாய்ப்பால் நன்றாக சுரப்பதற்கு சத்தான உணவுகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். எதிர்மறையான எண்ணங்களை அவர்கள் மனதில் விதைப்பது, தாய்ப்பால் சுரப்பதை குறைக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *