சூரி நீங்க எங்கேயோ போயிட்டீங்க.. பெர்லினே கை தட்டுதே.. கோட் சூட்டில் சும்மா கெத்துக்காட்டுறாரே!
சென்னை: காமெடி நடிகராக வலம் வந்த சூரி தற்போது சர்வதேச அளவில் சிறந்த படங்களை கொடுத்து சர்வதேச விருது விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அளவுக்கு தமிழ் சினிமாவின் தரத்தையே தனது நடிப்பால் உயர்த்திக் கொண்டிருக்கிறார்.
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்த இரண்டு படங்கள் திரையிடப்பட்டு பெரும் பாராட்டுக்களை அள்ளின. இந்நிலையில் அடுத்ததாக பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில், தனது கொட்டுக்காளி படத்தை திரையிட்டு அங்கேயும் சர்வதேச ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் சூரி.
கோட் சூட் உடையில் செம கெத்தாக சூரி கொடுத்த போஸ் தமிழ் சினிமா ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.
யாரையும் சாதாரணமாக எடை போடக்கூடாது: “Don’t Judge a book by it’s cover என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. அந்த பழமொழி தற்போது நடிகர் சூரிக்கு அப்படியே கச்சிதமாக பொருந்துகிறது. அதற்கான உழைப்பையும் சமீபகாலமாக நிறையவே செலுத்தி வருகிறார் சூரி. பரோட்டா காமெடியில் ஆரம்பித்து தற்போது பெர்லின் வரை அவரது புகழ் விண்ணை தொட்டு வருகிறது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில்: நெருப்பு குமார் என மான் கராத்தே படத்தில் கிண்டல் செய்யப்பட்ட அருண் ராஜா காமராஜ் எந்த அளவுக்கு திறமையானவர் என்பதை தனது முதல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் காட்டியிருந்தார். அடுத்து வாழ் படத்தை தயாரித்து பிக் பாஸ் பிரதீப் ஆண்டனியின் பர்ஃபார்மன்ஸை பலரும் அறியும்படி செய்திருந்தார். இந்நிலையில் அடுத்ததாக சூரியை வைத்து சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.