இவங்களுக்கு மட்டும் எங்கிருந்து தான் பணம் வருதோ? சொகுசு படகு வாங்கிய பாகிஸ்தான் தொழிலதிபர்
பெரும் பணக்காரர்கள் என்ற உடன் இந்தியர்களுக்கு எப்படி அம்பானி , டாடா, அதானி குழுமத்தினர் பெயர் உடனே நினைவுக்கு வருகிறதோ, அதே போல தான் பாகிஸ்தான் மக்களுக்கு பெரும் பணக்காரர் என்றால் உடன் நினைவு வருவது ஷாஹித் கான்.
அண்மையில் இவர் வாங்கி இருக்கும் சொகுசு படகு குறித்து பாகிஸ்தான் முழுவதும் பேசுபொருளாக இருக்கிறது.
ஷாஹித் கான் பாகிஸ்தானின் பணக்கார மனிதர். மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கி இருக்கும் போது ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் ஷாஹித் கான். சொகுசான வாழ்க்கை , விளையாட்டு துறைகளில் முதலீடுகள் ஆகியவற்றுக்கு பெயர் போனவர் ஷாஹித் கான் . உலகிலேயே ஆடம்பரமான சொகுசு படகுகளை வைத்திருப்பவர்கள் ஒரு சிலர். அந்த பட்டியலில் ஷாஹித் கானும் இணைந்துள்ளார்.
அண்மையில், ஷாஹித் கான் ரூ.2,900 கோடி மதிப்புள்ள சொகுசு படகினை வாங்கியுள்ளார். ஏற்கனவே இவர் ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொகுசு படகை வாங்கி பயன்படுத்தி வந்தார், பின்னர் அதனை கூகுள் நிறுவனத்தை சேர்ந்த ஒரு அதிகாரியிடம் விற்பனை செய்துவிட்டார்.
தற்போது வாங்கியுள்ள படகு ஜெர்மனியை சேர்ந்த லர்சென் என்ற நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது . இதன் உள் கட்டமைப்புகள் ரேமன் லாங்க்டென் நிறுவனத்தாலும், வெளிப்புறத் தோற்றமானது நுவோலரி லெனார்ட் நிறுவனத்தாலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
12 விருந்தினர்களை தங்க வைக்கக் கூடிய வகையிலும் ஒன்பது கேபின்களை கொண்டதாகவும் உள்ளது இந்த படகு. கிட்டதட்ட 40 ஊழியர்கள் தங்கி வேலை செய்யும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் அமர்ந்து திரைப்படங்களை ரசிப்பதற்கான இடம், யோகா அறை ,பார், ஜிம் ஆகியவை இதில் உள்ளன. நடனம் ஆடுவதற்கான இடம், பொழுது போக்குவதற்கான இடம் ஆகியவையும் உள்ளன.
சாகித் கான் பாகிஸ்தானின் லாகூர் நகரில் 1950 ஆம் ஆண்டு பிறந்தவர் . வறுமையான சூழலில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது பாகிஸ்தானின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கிறார். தொழிலதிபர் மற்றும் விளையாட்டு அதிபராகவும் இருக்கிறார். ப்ளெக்ஸ் அண்ட் கேட் நிறுவனத்தின் உரிமையாளர். இந்த நிறுவனம் மோட்டார் வாகன உதிரி பாகங்களை தயாரித்து சப்ளை செய்து வருகிறது.
ஷாஹித் கான், விளையாட்டு துறை சார்ந்த முதலீடுகளுக்கு பெயர் போனவர். உயர் வகுப்பினருக்கான மல்யுத்த சங்கம், நேஷ்னல் ஃபுட்பால் லீக்கின் ஜேக்சன்வில்லே ஜாக்குவார்ஸ் , ஃபுல்ஹாம் கிளப் ஆகியவற்றிலும் முதலீடு செய்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 99 ,598 கோடி ரூபாய் ஆகும்.