இந்த படத்துல பூனை எங்கே இருக்கு? 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க புலி!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் நெட்டிசன்கள் மத்தியிலும் ஒரு பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில், முதல் பார்வையில், சற்றுமுன் வரை நமக்கு தெரியாத இந்த விலங்குகள் எப்படி இந்த படத்தில் மறைந்திருந்தது என்று நெட்டிசன்கள் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரக்கட்டைகள் நிறைந்த இடத்தில் மறைந்திருக்கும் பூனையைக் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் புலி!
ஆப்டிகல் இல்யூஷன் ஏதோ ஒரு புதுமையான புதிர் அல்ல. நேற்றோ இன்றோ உருவானது அல்ல. கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே பண்டைய கிரேக்கத்தில் ஆப்டிகல் இல்யூஷன் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக தொல்லியல் துறையினர் கூறுகிறார்கள். கி.மு. 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவவாதி அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள பழமையான பல சிற்பங்கள் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் அமைந்தவைதான்.