வெண் பொங்கல் சாம்பார்: 15 நிமிடத்தில் செம்ம டேஸ்ட்!
பொங்கல் பண்டிகை நாளை (ஜன.14) தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. விவசாயம் மற்றும் சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் வைத்து படையல் இட்டு வழிபாடு செய்யப்படும். சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் என இரண்டு வகை பொங்கல் செய்யப்படும். வெண் பொங்கலுக்கு ஏற்ப சாம்பார் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பாசிப் பருப்பு- 1 கப்
சின்ன வெங்காயம்- 10
பச்சை மிளகாய்- 2
தக்காளி (பெரியது)- 2
சீரகம் – கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
சாம்பார் தூள்- 1 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
பெருங்காயம்- சிறிதளவு
தண்ணீர்- 4 கப்
தாளிக்க
கடுகு, உளுந்தம் பருப்பு- தேவையான அளவு
மிளகாய்- 1
கறிவேப்பிலை- சிறிதளவு
செய்முறை
முதலில் குக்கர் எடுத்து அதில் சாம்பார் செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அந்த அளவில் சேர்க்கவும். பாசிப் பருப்பை கழுவி சுத்தம் செய்த பின் சேர்க்கவும். எந்த கப்பில் பருப்பு எடுத்தீர்களோ அதே கப்பில் 4 கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் அதிகம் சேர்த்து சாம்பார் வேண்டுமென்றால் மற்றொரு கப் சேர்த்துக் கொள்ளலாம். அடுத்து விசில் போட்டு 4 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.