80DD கீழ் யாரெல்லாம் வருமான வரி விலக்கு பெற முடியும்..? – முழு விபரம்
வ ருமான வரி விலக்கு பெறுவதற்கு நமது வருமான வரி சட்டம் பல்வேறு பிரிவுகளை வழங்குகிறது. அதில் அனைவரும் கவனிக்க தவறுவது 80DD பிரிவு.
உங்கள் வீட்டில் மாற்றுத்திறனாளியாக யாரேனும் இருந்தால் அவர்களுக்கான மருத்துவச் செலவு, பராமரித்துச் செலவுகளுக்கு நீங்கள் வருமான வரிச் சலுகையைப் பெற முடியும்.
பிரிவு 80DD: ஒரு தனிநபர் தன்னைச் சார்ந்திருக்கும் மாற்றுத்திறனாளியின் மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக செலவு வரி விலக்கு பெற முடியும். மாற்றுத்திறனாளியின் குறைபாட்டின் தீவிரத்தின் அளவை பொறுத்து வரிச் சலுகைகள் மாறும். மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள குறைபாட்டின் தன்மை 40% முதல் 80% வரை இருந்தால் அவர்களின் மருத்துவ சிகிச்சை, பயிற்சி மற்றும் மறுவாழ்வுக்கான செலவுகளுக்கு ஒரு நிதியாண்டில் ரூ.75,000 வரை, குறைபாட்டின் தன்மை 80% அதிகமாக இருந்தால் ரூ.1,25,000 வரை வருமான வரிச் சலுகை பெற முடியும்.
பிரிவு 80DD இல் உள்ள நிபந்தனைகள் :வரி செலுத்தும் நபர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவருக்கு இந்த பிரிவு பொருந்தாது.மாற்றுத்திறனாளிகள் தங்களுக்காக வருமான வரி சலுகை பெற தனிப்பிரிவு உள்ளது. எனவே, வரி செலுத்தும் நபர், தன்னை சார்ந்திருக்கும் மாற்றுத்திறனாளிக்கு செய்யும் செலவுகளுக்கு வரி விலக்கு பெறலாம்.இந்தியாவில் வசிக்கும் நபருக்கு மட்டுமே இந்த பிரிவில் சலுகை கோர முடியும்.
ஏற்கனவே பிரிவு 80Uஇன் கீழ் தனக்காக வரி விலக்கு கோரி இருந்தால், அவரது பராமரிப்பாளரால் வரி சலுகை பெற முடியாது.சார்ந்திருப்பவர் என்றால், தனிநபரான வரி செலுத்துபவரின் மனைவி, குழந்தைகள் , பெற்றோர், சகோதரன்& சகோதரி ஆகியோர் ஆவர்.குறைபாட்டில் 40% கீழ் இருந்தால் சலுகை பெற முடியாதுஇதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை:மருத்துவ சான்று: சார்ந்திருக்கும் நபர் மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவ சான்றிதழை சமர்பிப்பது கட்டாயம்.
விண்ணப்ப படிவம் 10-1A: ஆட்டிசம், பல்வேறு உடல் குறைபாடு அல்லது மூளை முடக்கம் ஆகிய பிரச்சனைகளுக்கு இந்த விண்ணப்ப படிவத்தை சமர்பிப்பது கட்டாயம்.இந்த பிரிவின் கீழ் மனநல பாதிப்பு,காது கேளாமை,மூளை முடக்கம்,பார்வை மாற்றுத்திறன், கை, கால்கள் இயங்காமை போன்ற பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான செலவுகளுக்கு வரி விலக்கு பெற முடியும். தவற விடுகின்றனர்.