சனியின் நட்சத்திரப் பெயர்ச்சியால் யாருக்கு ஜாக்பாட்? எவருக்கு பிரச்சனை? 12 ராசிகளுக்கும் பலன்!
நவகிரகங்களில் சனிக்கிழமையின் நாயகராகவும் நீதிதேவராகவும் விளங்கும் சனீஸ்வர பகவான், மிகவும் மந்தமாக அதாவது மெதுவாக நகர்வார். குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திற்கு இன்னும் இரண்டு வாரங்களில் பெயர்ச்சி அடையும் சனீஸ்வரரின் நட்சத்திரப் பெயர்ச்சியால் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்.
ராகுவின் ராசியில் சஞ்சரிக்கும் சனி, ஏப்ரல் முதல் வாரத்தில் 6ஆம் தேதி ராசி மாற்றம் செய்வதால், அனைத்து ராசிகளுக்கும் என்ன பலன் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம். சனி நட்சத்திர பெயர்ச்சியால் (Saturn Nakshatra Transit) யாருக்கு லாபம்? எவருக்கு நஷ்டம்?…
மேஷம்
சனி பெயர்ச்சியால் வருமானம் அதிகரிப்பதோடு, சேமிப்பும் அதிகரிக்கும். குடும்பத்தில் கலக்கம் ஏற்படலாம், பிரச்சனைகளை கண்டு கலங்காமல் அவற்றை சரிப்படுத்த நேரத்தை செலவிடுங்கள்.
ரிஷபம்
குடும்பத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருக்கும், வேலை செய்பவர்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பிரச்சனை இல்லை என்றாலும், ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியிருக்கும்.
மிதுனம்
மேலதிகாரி மற்றும் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ள நிலையில், குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.
கடகம்
சனீஸ்வரரின் நட்சத்திர பெயர்ச்சி, நன்றாக இருக்கும். உடல்நிலையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், நிவாரணம் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்
தொழிலுக்கு சாதகமாக இருக்கும் சனீஸ்வரரின் நட்சத்திரப் பெயர்ச்சி, சிம்ம ராசிக்கு செலவினங்களை அதிகரிக்கும். ஆனால், வரத்தும் அதிகரிக்கும் என்பதால், கவலை வேண்டாம்.
கன்னி
வருமானம் குறையலாம், எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வராமல் தாமதமாகும். பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். நோய்கள் குணமாகும்.
துலாம்
முதலீடு செய்யும் போது கவனமாக இருங்கள், சரியான முடிவை எடுத்தால் பிரச்சனை இல்லை. ஆனால், சனியின் பெயர்ச்சியால், உங்கள் முடிவுகள் சரியாக இருக்குமா என்ற சந்தேகம் எழும். நஷ்டத்தை தவிர்க்க வேண்டுமெனில், பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடக்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சொத்து சம்பந்தமான விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். தொழிலை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல காலம் இது. ஆனால், பெற்றோரின் உடல்நிலை குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு, அற்புதமான பயண வாய்ப்புக் கிடைக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வரலாம், இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பும், வெளியூர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபம் கிடைக்கும். அன்றாட வேலைகளில் ஏற்படும் இடையூறுகளால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் கவலைகளை அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். வணிகத்தில் பெரிய வாய்ப்புகள் இருக்கும், உங்கள் தொடர்புகளும் அதிகரிக்கும். பயணம் செய்யும் வாய்ப்பை தவிர்க்க வேண்டாம், வாழ்க்கையில் முக்கியமான காலகட்டம் இது.
மீனம்
நேரம் நன்றாக இருக்கும். செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்காக நேரம் கொடுக்க பல வாய்ப்புகள் கிடைக்கும், எனவே உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்ச்சியாக இருக்கலாம்.