அம்பானி குடும்பத்தில் யார் யாருக்கு என்ன பதவி..? முக்கியமான அனில் அம்பானி பதவியை பாருங்க..!!
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கிரீன் எனர்ஜி துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. டெலிகாம், ரீடைல் தொடர்ந்து அடுத்த பெரிய வர்த்தகமாக இருக்கப்போவது கிரீன் எனர்ஜி துறை தான்.
மறைந்த திருபாய் அம்பானி 1985 இல் ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷன் தான் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆக கலக்கி வருகிறது. இப்போது முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவராகவும், ரிலையன்ஸ் குழுமத்தில் அனில் அம்பானி தலைவராகவும் உள்ளனர். இந்த நிலையில் அம்பானி குடும்பம் மொத்தமும் நிர்வாக பொறுப்புகளில் நிரம்பி வழியும் வேளையில் யார் யார் எந்த பதவியில் இருக்கிறார்கள் என்பது பெரும் வியப்பை அளிக்கிறது.
முகேஷ் அம்பானி: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியில் முகேஷ் அம்பானி உள்ளார். அவரது நிகர மதிப்பு, ஃபோர்ப்ஸ் படி, $114 பில்லியன் (ரூ. 95,29,69,89,00,000).
நீதா அம்பானி: முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி ஆகியவற்றின் நிறுவனர் ஆவார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனராகவும் உள்ளார்.
இஷா அம்பானி: முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் ஒரே மகள் இஷா அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இயக்குநர்கள் குழுவில் உள்ளார். அவர் ரிலையன்ஸ் அறக்கட்டளை, ரிலையன்ஸ் அறக்கட்டளை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி ஆகியவற்றின் ஒரு பகுதியாகவும் உள்ளார்.
ஆகாஷ் அம்பானி: முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் குழுவில் நிர்வாகமற்ற இயக்குனராகவும், 2022 முதல் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட்டின் தலைவராகவும் உள்ளார்.
அனந்த் அம்பானி: முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்டுக்கும் வரவிருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் நியூ எனர்ஜி லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி லிமிடெட் ஆகியவற்றின் வாரியங்களில் இயக்குநராக ஆனந்த் அம்பானி உள்ளார். அவர் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஒரு பகுதியாகவும் உள்ளார்.
அனில் அம்பானி: முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில் அம்பானி ரிலையன்ஸ் குழுமம் அல்லது ரிலையன்ஸ் ஏடிஏ குழுமத்தின் தலைவராக உள்ளார். இதில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் டிஃபென்ஸ் மற்றும் இன்ஜினியரிங் லிமிடெட், ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை அடங்கும்.
ஜெய் அன்மோல் அம்பானி: அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் அம்பானி ரிலையன்ஸ் கேபிட்டலின் நிர்வாக இயக்குநராகவும், ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார்.