பாகிஸ்தானில் ஆட்சியமைக்கப் போவது யார்?
பாகிஸ்தானில் மொத்தமுள்ள 266 இடங்களுக்கு இதுவரை, 250 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பாகஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா்கள் 99 இடங்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளனர்.
இன்னும் சில மணி நேரங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவடையும் நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், பாகிஸ்தானில் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சோந்து ஆட்சியமைக்க அந்நாட்டு முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவருமான நவாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) 71 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 53 இடங்களிலும், முட்டாஹிதா குவாமி இயக்கம் 17 இடங்களிலும், மற்ற இடங்களில் சிறிய கட்சியும் மற்றும் பிற சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை தோதல் முடிவுகள் அறிவிக்கப்படாத பெரும்பாலான தொகுதிகளிலும் பிடிஐ ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா்களே முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருந்தாலும், அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யாா் என்பதில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி சில இடங்தளில் அரசியல் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
பாகிஸ்தானில் முந்தைய தோதல்களுக்குப் பிறகு நடந்ததைப் போல சிறிய கட்சிகள் அணி தாவுவது, எம்.பி.க்கள் விலைக்கு வாங்கப்படுவது போன்றவை மூலம் காட்சிகள் வேகமாக மாறுவதற்கான வாய்ப்புகள் இந்த முறையும் உள்ளதாகக் கூறப்படுகிறது.