என் உண்மையான அப்பா யார் தெரியுமா? நாராயண மூர்த்தியை சீண்டிய மகள் அக்ஷதா மூர்த்தி

ன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, வாரத்தில் 70 மணி நேர வேலை செய்வதை வலியுறுத்தி, இந்தியாவின் இளைஞர்களை தேசத்தின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணிக்குமாறு கூறியதற்காக சில காலமாக செய்திகளில் இடம் பெற்று வருகிறார்.அவரது இளமைக்காலத்தில் நாராயண மூர்த்தி இவ்வாறே வேலை பார்த்துள்ளார்.
இது அவரது பிள்ளைகளுக்கும் தெரியும். நாராயண மூர்த்தியும் அவரது மனைவி சுதா மூர்த்தியும் சேர்ந்து அவர்களது வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் ஆன் அன்காமன் லவ்: தி இயர்லி லைப் ஆப் சுதா அண்டு நாராயண மூர்த்தி என்ற நூலை வெளியிட்டனர்.அதில் தங்களது குடும்பத்தை வளர்ப்பதற்கு பட்ட சிரமங்களையும் இன்போசிஸ் நிறுவனத்தை வழிநடத்தியதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர்.
இன்போசிஸ் இன்றைக்கு நாட்டின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமாக உள்ளது.இன்றைக்கு மிகப் பெரிய விருட்சமாக வளர்ந்துள்ள இன்போசிஸ் நிறுவனத்தை நாராயண மூர்த்தி எவ்வளவு அர்ப்பணிப்போடு பாடுபட்டு வளர்த்தார் என்ற விவரம் இந்தப் புத்தகத்தில் உள்ளது.
அதேவைளையில் தங்களது பிள்ளைகளான அக்ஷதா மூர்த்தி, ரோஹன் ஆகியோரை சுதா மூர்த்தி எப்படி சிறப்பாக வளர்த்தார் என்பதையும் இந்தப் புத்தகத்தில் அறிந்து கொள்ளலாம்.இதில் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா தனது தந்தையின் இருப்பு இல்லா விரக்தியில் அவருடன் சண்டையிட்ட தருணம் பற்றி கூறப்பட்டுள்ளது.இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியான அக்ஷதா மூர்த்தி சில ஆண்டுகளுக்கு முன்பு தனது உண்மையான தந்தை தனது தாத்தா என்று குறிப்பிட்டார். நாராயண மூர்த்தியை தனது போனஸ் தந்தை என்று குறிப்பிட்டார்.நாராயண மூர்த்தியின் மகனும் அவருடன் சண்டையிட்டார்.
யாரை நீங்கள் மிகவும் விரும்புகிறீர்கள்? என்னையா, அக்ஷதாவையா அல்லது இன்போசிஸ்ஸையா என்று துணிச்சலுடன் கேட்டார். ஆனால் மகனுக்கு ஆச்சரியம் தரும் வகையில் நாராயண மூர்த்தி, இருவரையும் சமமாக விரும்புகிறேன் என்று பதிலளித்தார்.
சமீபத்தில், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, இந்திய இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதையடுத்து இளம் தொழிலாளர்களின் கோபத்தை இந்த அறிக்கை எதிர்கொண்டது.77 வயதான ஐஐடி பட்டதாரி ஒரு நேர்காணலில் இளைஞர்களுக்கான வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்வது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என்று கூறினார். அத்துடன் தான் வேலை செய்யும் போது வாரத்துக்கு 6 நாட்களும் 70 மணிநேரத்துக்கும் மேலாக வேலை செய்ததாகவும் இதனால் பல்வேறு பயன்களை அடைந்ததாகவும் நாராயண மூர்த்தி கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *