சுவிட்சர்லாந்தில் வாழும் ரஷ்யர்களின் ஆதரவு யாருக்கு? வாக்கெடுப்பு முடிவுகள்

ரஷ்யாவில் பொதுத்தேர்தல் முடிந்து மீண்டும் புடின் ஜனாதிபதியாகியுள்ள நிலையில், சுவிட்சர்லாந்தில் வாழும் ரஷ்யர்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறிந்துகொள்வதற்காக, அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்புகள் சில நகரங்களில் நடத்தப்பட்டன.

அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்புகள்
அவ்வகையில், ஜெனீவாவிலுள்ள Russian Mission மற்றும் Bernஇலுள்ள ரஷ்ய தூதரகம் ஆகிய இடங்களில் வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.

வாக்கெடுப்பில், புடினுக்கு ஆதரவாக ஜெனீவாவில் 20 சதவிகித வாக்குகளும், Bernஇல் 16 சதவிகித வாக்குகளும் கிடைத்தன. ரஷ்யாவில் புடினுக்கு 87 சதவிகித வாக்குகள் கிடைத்ததாக கூறப்படும் நிலையில், சுவிட்சர்லாந்தில் வாழும் ரஷ்யர்களின் ஆதரவு புடினுக்கு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

அதற்கு பதிலாக, அவர்கள் Vladislav Davankovக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். அவர் New People party என்னும் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.

Vladislav Davankovக்கு Bernஇல் 45 சதவிகித வாக்குகளும், ஜெனீவாவில் 29 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *