யார் இந்த மவுன பாபா? அயோத்தி ராமர் கோவிலுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?
மத்தியப்பிரதேசத்தை சேர்ந்தவர் மவுனி பாபா. இவர் தனது 10 வயதில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டி கடந்த 44 ஆண்டுகளாக செருப்பு அணியாமல், மவுன விரதம் மேற்கொண்டு வந்தார். வரும் ஜனவரி 22ஆம் தேதி உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ராமர் கோவில் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது. ராமர் சிலை பிரதிஷ்டை செய்தவுடன் தனது மவுன விரத்தை ”ராம்” என்ற சொல்லை உச்சரித்து கைவிடுகிறார். அதேபோல், செருப்பு அணிய மாட்டேன் என்று எடுத்து இருந்த சபதத்தையும் கைவிடுகிறார்.