சொந்தமாக கார், ஜெட், ஹெலிகாப்டர்.. ரூ.8,407 கோடிக்கு அதிபதியான நகைக்கடை ஓனர்.. யார் தெரியுமா?
ரூ.178 கோடி மதிப்புள்ள ஜெட், 48 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெலிகாப்டருக்கு சொந்தகாரரான கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடையின் உரிமையாளர் டி. எஸ். கல்யாணராமன் பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.
டி. எஸ். கல்யாணராமன் தனது 12 ஆவது வயதிலிருந்தே அவரது தந்தையிடமிருந்து தொழில் பாடங்களை படிப்பதன் மூலமாக தனது தொழில் பயணத்தை துவங்கி விட்டார். தற்போது அவர் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நகை கடையின் உரிமையாளர்.
கடந்த பத்து வருடங்களாக இந்தியாவில் இருக்கக்கூடிய பில்லியனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பணக்கார தொழில் அதிபர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறையை பின்பற்றவும், விலை உயர்ந்த கார்களை வாங்கி குவிப்பதையுமே விரும்புகின்றனர். இந்த பதிவில் கேரளாவை சேர்ந்த தொழிலதிபரான கல்யாணராமனை பற்றி பார்க்கலாம்.
தற்போது இவர் கல்யாண் ஜூவல்லர்ஸ் மற்றும் கல்யாண் டெவலப்பர்ஸ் -இன் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டராக செயலாற்றி வருகிறார். இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடை உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவிற்கு வெளியே இருக்கக்கூடிய ஒரு சில நாடுகளிலும் கல்யாண் ஜூவல்லர்ஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் கூறியது போல டி. எஸ். கல்யாணராமன் தான் 12 வயதாக இருக்கும் பொழுதிலிருந்தே தனது தந்தையிடம் பல்வேறு தொழிற்சார்ந்த பாடங்களை கற்றுக் கொண்டார். அவற்றை முறையாக செயல்படுத்தி தற்போது இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் ஜுவல்லரி ஸ்டோரின் உரிமையாளராகவும் உள்ளார்.
கல்யாண் ஜுவல்லர்ஸ் முதன்முதலாக 1993 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூபாய் 8,407 கோடியாக உள்ளது. டி. எஸ். கல்யாணராமனுக்கு விலை உயர்ந்த கார்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் உண்டு. ஆகையால் அவர் தற்போது ஒரு ரோல்ஸ் ராய்ஸ் பாந்தோம் சீரிஸ் I மற்றும் இரண்டு பாந்தோம் சீரிஸ் II மாடல்கள் உட்பட 3 ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு சொந்தக்காரர்.
பிரபலமான பிரிட்டிஷ் தயாரிப்பாளருக்கு சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ் பாந்தோம் காரின் விலை ₹ 10 கோடி. இந்த ஆடம்பர கார் வலுவான 6.75 லிட்டர் V12 பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்குகிறது.
மூன்று ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் தவிர கல்யாணராமனிடம் ஒரு பிரைவேட் ஜெட் மற்றும் ஒரு ஹெலிகாப்டரும் உள்ளது. இவர் 178 கோடி மதிப்புள்ள Embraer Legacy 650யின் ஓனர். அது மட்டும் அல்லாமல் கனடாவில் தயாரிக்கப்பட்ட பெல் 4207 ஹெலிகாப்டரின் சொந்தக்காரர் என்ற பெருமையையும் கல்யாணராமன் பெற்றுள்ளார். மேலும் இந்த ஹெலிகாப்டரின் விலை ரூ.48 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.