புடினுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியவர்… ஒரே ஒரு காரணத்தால் நிராகரிப்பு
உக்ரைன் போருக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர், ரஷ்ய தேர்தல் ஆணையத்தால் போட்டியிடுவதில் இருந்து நிராகரிக்கப்பட்டுள்ளார்.
உக்ரைன் போருக்கு எதிராக
ரஷ்யாவில் மார்ச் மாதம் ஜனாதிபதி தேர்தல் முன்னெடுக்கப்பட உள்ளது. இந்த நிலையிலேயே உக்ரைன் போருக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த Boris Nadezhdin என்பவரின் விண்ணப்பத்தை ரஷ்ய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
மேலும், அவர் தனது வேட்பாளர் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த கையொப்பங்களில் 15 சதவிகிதத்திற்கும் அதிகமானவை போலியானவை என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது.
ஆனால் அவரது விளக்கங்கள் எதையும் ஏற்றுக்கொள்ள மறுத்த ரஷ்ய தேர்தல் ஆணையம், அவரது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்தை விட்டுவிடுவாதாக இல்லை என்றும், ரஷ்யாவின் உச்ச நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் Boris Nadezhdin அறிவித்துள்ளார்.
ரஷ்யா முழுவதும் 200,000 க்கும் மேற்பட்ட கையெழுத்துகளை தாம் சேகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இதை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
9,000 கையெழுத்துகள் செல்லாது
ஆனால் சமர்ப்பிக்கப்பட்ட அந்த கையெழுத்துகளில் 9,000 எண்ணிக்கை செல்லாது என்று தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக பதிய வேண்டும் என்றால் 100,000 கையெழுத்துகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஆனால் தற்போது 9,000 கையெழுத்துகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், 95,587 எண்ணிக்கை மட்டுமே எஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது. மார்ச் 15 முதல் 17 வரையில் ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் முன்னெடுக்கப்பட இருக்கிறது.
எதிர்வரும் சனிக்கிழமை யார் யார் போட்டியிடுகிறார்கள் என்ற பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. ரஷ்யாவின் முதன்மை எதிர்க்கட்சி தலைவரான Alexei Navalny சிறையில் இருந்துகொண்டு தமது கட்சியின் ஆதரவை Boris Nadezhdin கட்சிக்கு தெரிவித்திருந்தார்.