அரசியலுக்கு வந்த முதல் நடிகர் யார்? எம்.ஜி.ஆர் டூ விஜய்.. ஆடுகளம் டூ அரசியல் களம்!

சென்னை: சினிமா டூ அரசியல் என புதிய அவதாரம் எடுக்க இருக்கிறார் விஜய். இதுவரை எத்தனைப் பேர் சினிமாவில் இருந்து அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார்கள்?

அதன் பலன் என்ன? பலவீனம் என்ன?

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டில் ஒன்றும் அதிர்ச்சியான செய்தி அல்ல. காலங்காலமாக அது நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இன்னொரு பக்கம் அரசியல் தலைவர்களைத் திரையில் தேடாதீர்கள் என்று பலர் பேசி வருகிறார்கள். சினிமா துறையைச் சேர்ந்த சீமான் கூட, சினிமா நடிகர்களை அரசியல் தலைவர்களாகப் பார்க்காதீர்கள் எனப் பேசிவருகிறார். ஆனால், விஜய் கட்சி தொடங்குவதில் அவரிடம் எதிர்ப்பு இல்லை. ‘தம்பி வரட்டும்; ஒரு தமிழன் வரட்டும்’ என்று சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறார்கள்.

இதற்கு நேரெதிரில் இருக்கிறது பாமக. திரை நட்சத்திரங்கள் என்றாலே அக்கட்சிக்கு அலர்ஜியாக இருக்கிறது. அவர்களை அரசியல் தலைவர்களாக ஏற்கக்கூடாது எனப் பல வருடங்களாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குரல் எழுப்பி வருகிறார்.

ஆனால், விதி வலியது என்பதுபோல் அன்று எம்.ஜி.ஆர் தொடங்கி இப்போது கமல்ஹாசன் வரைக்கும் திரைத்துறையைச் சார்ந்தவர்களே தமிழக அரசியலில் செல்வாக்கு செலுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் கூடிய விரைவில் இப்போது விஜய்யும் இணைய இருக்கிறார்.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், எம்.ஜி.ஆர் சினிமா இருந்து அரசியலுக்கு வரவில்லை. அவர் நாடக உலகத்திலிருந்து சினிமாவுக்குப் போனார். அப்போது அவர் தூய்மையான காந்தியவாதி. எளிமையாகச் சொன்னால், காங்கிரஸ் தொண்டர்.

அவர் மட்டுமல்ல; சினிமாவில் உள்ள பலர் அன்றைக்குக் காங்கிரஸ் தொண்டர்களாகவே இருந்தனர். குறிப்பாகச் சொன்னால் கே.பி.சுந்தராம்பாள். மிகப் பிரபலமான பாடகி. லதாமகேஷ்கர் வியந்து பார்த்த பாடகி. அவரது கணவர் கிட்டப்பா காங்கிரஸ்காரர். அப்படிப்பட்ட கே.பி.சுந்தராம்பாளை முதன்முதலாக எம்.எல்.சி ஆக்கி, சினிமா டு அரசியல் களத்திற்கு அவரை அழைத்து வந்தவர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *