பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறும் நபர் யார்? சம்பளம் எவ்வளவு?
பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் நபர் யார் என்பது குறித்து இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அவர் பெறப்போகும் சம்பளம் குறித்தும் பிக் பாஸ் ரசிகர்கள் அதிகம் விவாதித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில், தற்போது கிளைமேக்ஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இதில் நடிகை விசித்திரா, பூர்ணிமா, அர்ச்சனா, ஜோவிகா, மாயா, பிரதீப் ஆண்டனி, மணி சந்திரா, தினேஷ், நிக்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிக பிரபலமாக இல்லாதவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதிலும், போட்டி தொடர்ந்து ரசிகர்களுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படும் நபர் யார் என்பது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக ரவீனா, சரவண விக்ரம் மற்றும் விசித்ரா ஆகிய மூன்று பேரில் ஒருவர் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளனர். இவர்களில் சரவண விக்ரம் வெளியேறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சரவண விக்ரம் 80 நாட்களுக்கும் மேலாக தாக்கு பிடித்துள்ளார். அவருக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் அவருக்கு சுமார் ரூ.15 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை, இந்த வாரம் சரவண விக்ரம் வெளியேற்றப்பட்டு விட்டால் பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா, தினேஷ், மணிச்சந்திரா, விசித்திரா, ரவீனா, பூர்ணிமா, நிக்சன் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக தொடர்வார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரந்தோறும் சில போட்டியாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர். ரசிகர்கள் வாக்களிப்பதில் யாருக்கு குறைவான வாக்கு கிடைக்கிறதோ அவர் வெளியேற்றப்படுகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி டிவியில் தொடங்கப்பட்டது. ஜனவரி 14-ஆம் தேதி பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.