அமெரிக்காவின் ஏரியா 51 உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் ஏன் யுஎஃப்ஒக்கள் அதிகமாக காணப்படுகின்றன.?
பூமியில் எப்படி மனிதர்கள் வாழ்கிறார்களோ, அதே போல வேற்று கிரகங்களில் வசிப்பவர்கள் வேற்றுகிரகவாசிகள் அல்லது ஏலியன்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த பிரபஞ்சத்தில் நிச்சயம் மனிதர்கள் மட்டும் தனியாக இல்லை, ஏலியன்கள் வாழ்கின்றன என்று தொடர்ந்து ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். குறிப்பாக பூமிக்கு வேற்றுகிரகவாசிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் ஏலியன்களின் யு.எஃப்.ஓ.க்களும் (UFO) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் உலகில் ஏலியன்கள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே ஏலியன் மற்றும் யு.எப்.ஓக்கள் தொடர்பான மர்மங்களும் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் யுஎஃப்ஓ குறித்து உட்டா பல்கலைக்கழகத்தின் புவியியலாளர்கள் சமீபத்தில் ஆய்வு நடத்தினர். யுஎஃப்ஓக்கள் குறித்த தகவல்களை வரைபடமாக்குவதற்கான முதல் படியாகக் கருதப்படுகிறது. 2001 முதல் 2020 வரையிலான யுஎஃப்ஒ தொடர்பான அறிக்கைகளில் பெரும்பாலானவை அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலிருந்து பதிவானவை தான்., அவை நெவாடாவில் உள்ள ஏரியா 51 மற்றும் நியூ மெக்சிகோவில் உள்ள ரோஸ்வெல் ஆகிய இடங்களில் காணப்பட்ட பெரும்பாலான யுஎஃபோக்கள் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
யுஎஃப் தொடர்பான தகவல்களுக்கும், இந்த மேற்கத்திய மாநிலங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகள் அடிக்கடி மழை பொழிவதைப் பெறுகின்றன என்றும் ‘ஒப்பீட்டளவில் மேகமூட்டத்துடன்’ இருக்கின்றன. .
பென்டகனின் சமீபத்தில் ஓய்வுபெற்ற யுஎஃப்ஒ தலைவர் டாக்டர் சீன் கிர்க்பாட்ரிக் உடன் ஏற்படுத்தப்பட்ட கூட்டாண்மையுடன், உட்டா பல்கலைக்கழகத்தின் புவியியலாளர்கள் ஒரு நிமிட சம்பவம் முதல் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட சம்பவம் வரையிலான மிகப்பெரிய 98,000 UFO அறிக்கைகளை விஞ்ஞானிகளை ஆய்வு செய்தனர்.
“நியூ மெக்ஸிகோவில் உள்ள ரோஸ்வெல்லின் நெவாடாவில் உள்ள ஏரியா 51 க்கு மேற்கு நாடுகள் வரலாற்று உறவைக் கொண்டுள்ளன” என்று உட்டா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரும் ஆய்வின் முதன்மை ஆசிரியருமான ரிச்சர்ட் மெடினா தெரிவித்துள்ளார்.
பகுதி மக்கள்தொகை அடர்த்தி, ஒளி மாசு அளவுகள், வருடாந்திர மேக மூட்டம், விமான நிலையங்கள் மற்றும் இராணுவத்தின் அருகாமை போன்றவை யுஎஃப்.ஓக்களின் அதிர்வெண்ணைப் பாதிக்கும் பல்வேறு குணாதிசயங்களின் அடிப்படையில் தரவு ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டது.” என்று தெரிவித்தார்.