மத்தியகிழக்கில் அமெரிக்கா எதற்காக B-1 குண்டுவீச்சு விமானங்களை பாவித்தன…!
மத்திய கிழக்கில் ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள ஈரான் ஆதரவு அமைப்புக்கள் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்கள் இலக்குகளுக்கு சேதம் ஏற்படுத்துவதை கடந்து பல்வேறு செய்திகளை சொல்ல முற்படுகின்ற தாக்குதல்களாகவே பார்க்கப்படுகின்றன.
அமெரிக்காவின் தாக்குதல் இலக்குகள், தாக்குதல் நாடாத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயுதங்கள், தாக்குதலை தெடர்ந்து அமெரிக்காவின் பென்டகன் உபயோகித்த சொல்லாடல்கள் இவை எல்லாமே அந்த தாக்குதலை கடந்த பல புவிசார் இராஜதந்திர நகர்வுகள்.அமெரிக்கா மேற்கொண்ட அந்த தாக்குதல்களின் பின்னனியில் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றது.
ஈராக்கிலும் சிரியாவிலும் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்கள் அத்தனையுமே ஈரானின் இலக்குகள் தான் என்பதை முதலில் கவனத்தில் எடுக்க வேண்டும்.
நேரடியாக ஈரானின் இறையாண்மைக்கு உட்பட்ட நிலப்பகுதி மீது மேற்கொள்ளவில்லையே தவிர கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்ட 85 இலக்குகளுமே ஈரானின் இலக்குகள் தான்.