“கொடநாடு கொலை வழக்கு விசாரணையை முதல்வர் ஏன் தாமதப்படுத்துகிறார்?!” – ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

திருச்சியில் நடைபெற்ற தனது ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஓ.பி.எஸ், அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சியின் போது, 4 பேரை வைத்துக் கொண்டு படாதபாடுபட்டேன் என்று கூறியிருக்கிறார். யாரை அவர் சொல்கிறார் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். அவர் கேட்ட பொறுப்பை எல்லாம் கொடுத்தோம். ஆனால், எந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். வரும் தேர்தல் பார்லிமென்ட்டுக்கானது. இந்திய தேசத்தை யார் ஆள வேண்டும் என்பதற்கான தேர்தல். 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை அளித்த பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி 3-வது முறையாக மீண்டும் வருவதற்கு முழு ஆதரவாக இருப்போம்.

ஓ.பன்னீர்செல்வம்லோக்சபா தேர்தல் குறித்து முறைப்படி கூட்டணி அமைத்த பின்னரே எந்தெந்த கட்சிகள் என்பது குறித்து அறிவிக்கப்படும். அ.தி.மு.க ஒன்றரை கோடி தொண்டர்களின் கட்சி. அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். ஆனால், ஏன் அதை பழனிசாமி தடுக்கிறார் என்று அவர்கள் தான் கேட்கின்றனர். அதற்குக் காரணம் சுயநலம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் காப்பாற்றப்பட்ட 50 ஆண்டுகால சட்ட விதியை மாற்றலாமா?. பழனிசாமி தரப்பில் இருப்பவர்கள் மனவேதனையோடு என்னிடம் இதை பற்றி பேசுகின்றனர். நாங்கள் என்ன சொன்னாலும் அவர் கேட்கமாட்டேன் என்கிறார். எல்லாம் எனக்குத் தெரியும் என்கிறார் என்று கூறுவதாக மனவருத்தத்தோடு கூறுகின்றனர்.

கொடநாடு கொள்ளை, கொலை வழக்கு தொடர்பாக 3 மாதத்தில் உரிய விசாரணை நடத்தி முடிப்பேன் என்று முதல்வர் ஸ்டாலின் தான் கூறினார்.

ஆனால், அதனை ஏன் தாமதப்படுத்துகின்றனர், அவர்கள் இருவரும் கூட்டணி வைத்துள்ளனரா என்று மக்கள் கேட்கின்றனர். அதைத்தான் நானும் கேட்கிறேன்.

இருதரப்பிலும் உள்ள நிர்வாகிகள் குறித்து இணையும் நேரத்தில் பேசிக்கொள்வோம். இப்போதே சண்டையை மூட்டி விடாதீர்கள். நாட்டில் அடுத்து யார் பிரதமர் என்ற கேள்வியும், மோடி தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்ற கருத்தும் பொதுவாக உள்ளது. ஐ.என்.டி.ஐ கூட்டணி என்பது ஆண்டிகள் கூடி கட்டிய மடம்.

பன்னீர்செல்வம்திகார் சிறைக்கு பழனிசாமியை அனுப்பும் ரகசியத்தை உரிய நேரத்தில், இடத்தில் கூறுவோம். அ.தி.மு.க விவகாரம் குறித்து தற்போது வழங்கப்பட்டுள்ளது அனைத்து தீர்ப்பும் தற்காலிக தீர்ப்பு தான். 19-ம் தேதி மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. ஆரம்பத்தில் பொதுக்குழுவில் இருந்து அனைத்து அம்சங்களையும் எடுத்துக் கொள்வோம் என கூறியிருக்கின்றனர். அதில், என்ன வருகிறதோ, அதனை எடுத்துக்கொண்டு நீதிக்கு தலை வணங்குவோம். சுப்ரீம் கோர்ட் யாருக்கும் சின்னம் வழங்கவில்லை எனில் லோக்சபா தேர்தலில் இறைவன் கொடுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம். கோர்ட் தீர்ப்புகளால் நாங்கள் சோர்ந்துவிடவில்லை.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *