திருமணத்திற்குப் பிறகு பெண்கள் ஏன் காலில் மெட்டி அணிகிறார்கள்? அறிவியல் காரணம் தெரிஞ்சா அதிர்ந்து போவீர்கள்..!

இந்தியாவில் திருமணம் ஆன இந்து பெண்களால் பொதுவாக கால்விரலில் மெட்டி அணியப்படுகின்றன. இரண்டு கால்களிலும் இரண்டாவது விரலில் மெட்டி அணியப்படுகின்றன. இது பொதுவாக வெள்ளி உலோகத்தாலானது. இந்திய வழக்கப்படி, பெண்கள் திருமணத்திற்கு பிறகு தான் மெட்டி அணிய தொடங்குவார்கள். பெண்களுக்கு தாலி அணிவது கட்டாயமாக கருதப்படுவது போல, மெட்டியும் முக்கியத்துவம் இருப்பதாக நம்மப்படுகிறது. மெட்டி என்பது வெறும் ஆபரணம் அல்ல… அதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணமும் இருக்கிறது. எனவே அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்..

பெண்கள் ஏன் கால் மெட்டி அணிகிறார்கள்:
இந்து மதத்தில், திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண் வெள்ளி மெட்டி அணிவது வழக்கம். இதை அணிந்திருக்கும் பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது என்பதற்கான அறிகுறிகளில் ஒன்றாகும். இது மணமகளின் பதினாறு அலங்காரங்களில் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. கால்விரலில் மெட்டி அணிவதால் திருமணமான பெண்ணின் அழகை அதிகரிப்பது மட்டுமின்றி உடல் ரீதியாகவும் சில நன்மைகள் கிடைக்கும்.

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும்:
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கால்விரலில் மெட்டி அணிவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. கணவன்-மனைவி இடையே நல்ல உறவைப் பேண, மனைவி தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது கால்விரலில் மெட்டி அணிய வேண்டும்.

லட்சுமி தேவியின் ஆசிகள் என்றும் நிலைத்திருக்கும்:
மெட்டி உடலுக்கு நல்ல உலோகமாக கருதப்படுகிறது. மெட்டி அணிவது லட்சுமி தேவியை மகிழ்விப்பதோடு அவளுடைய ஆசீர்வாதத்தையும் பராமரிக்கிறது. மேலும், கால்விரலில் மெட்டி அணிவது எதிர்மறை ஆற்றலைத் தடுக்கிறது.

சந்திரன் வலுவடைகிறது:
பெண்கள் மெட்டியை வெள்ளியில் நடுவிரலில் அணிய வேண்டும். வெள்ளி பூமியின் துருவ ஆற்றலை உறிஞ்சும் திறன் கொண்டது மற்றும் சந்திரனின் உலோகமாக கருதப்படுகிறது. இது உங்கள் சந்திரனை பலப்படுத்துகிறது.

இவைதான் அறிவியல் காரணங்கள்:
பாதத்தின் நடுப்பகுதி மூன்று விரல்களின் நரம்புகள் பெண்களின் கருப்பை மற்றும் இதயத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு கால்விரல்களிலும் மெட்டி அணிவதால் கருவுறுதல் பலப்படும். இது கருப்பையின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *