இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் தேதி மாற்றப்பட்டது ஏன்?
2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதியன்று தாக்கல் செய்வார்.
சில ஆண்டுகள் முன்புவரை இந்த பட்ஜெட் பிப்ரவரி மாதம் கடைசி தேதியில்தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.ஆனால் இந்த வழக்கம் 2017 ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது. பிப்ரவரி 1க்கு பதிலாக மாதக்கடைசியில் மாற்றப்பட்டது ஏன் தெரியுமா?2017இல் மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி காலனி காலத்தில் பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலைநாளில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இனி அப்படி செய்யப்படாது என்று அறிவித்தார். காலனி கால வழக்கத்தை விட்டொழிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். மாதக் கடைசியில் பட்ஜெட் அறிவிப்புகளை அடுத்த நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்துவதற்கு சிக்கல் இருப்பதால் மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.இந்தச் சிக்கலைத் தவிர்க்க 2017 பட்ஜெட்டை பிப்ரவரி முதல் தேதியன்று தாக்கல் செய்யலாம் என்று அருண் ஜெட்லி தான் கருத்து கூறினார்.பட்ஜெட் தேதி மட்டுமல்ல, 92 ஆண்டுகாலமாக ரயில்வேக்குத் தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதை மாற்றி ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் அருண் ஜேட்லி இணைத்தார்.1999 வரை மத்திய பட்ஜெட் பிப்ரவரி கடைசி தேதியில் மாலை 5 மணிக்குத்தான் தாக்கல் செய்யப்பட்டது. நாடு விடுதலை ஆனபின்னரும் இந்த வழக்கம் மாற்றப்படவில்லை. காலனி ஆதிக்கக் காலத்தின் போது இங்கிலாந்தில் நண்பகல் 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இது இந்திய நேரப்படி மாலை 5 மணியாகும்.1999இல் அப்போதைய அடல் பிஹாரி வாஜபேயின் தலைமையிலான அரசில் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா நண்பகல் 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம் என்றார். இதன் மூலம் பட்ஜெட் பற்றி ஆய்வு செய்வதற்கும் விவாதிப்பதற்கும் நிறைய கால அவகாசம் கிடைக்கும் என்று கூறினார்.அவரது யோசனைக்கு ஒப்புதல் கிடைத்ததால் பிரிட்டிஷ் வழக்கத்தை உடைத்து 1999 மத்திய பட்ஜெட்டை சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக நண்பகல் 11 மணிக்கு சின்ஹா தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் நண்பகல் 11 மணிக்குத்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.தற்போது முதன்முறையாக மத்தியில் ஆளும் பாஜக அரசு பிப்ரவரி 28 ஆம் தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முறையை மாற்றி பிப்ரவரி 1 ஆம் தேதியன்று தாக்கல் செய்கிறது. பொது பட்ஜெட்டைத் தயாரிக்கும் பணிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.