கோட் சூட் அணிந்தது ஏன்? – முதல்வா் மு.க.ஸ்டாலின் சொன்ன சுவாரஸ்யம்!
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.07)தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். சுமார், 450-க்கும் மேற்பட்ட பன்னாட்டுப் பிரதிநிதிகள், 170-க்கும் மேற்பட்ட உலகப் புகழ் பெற்ற பேச்சாளர்கள், 50 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
மாநாட்டில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், “மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரையும் வரவேற்கிறேன். பொதுவாக வெளிநாடுகளுக்கு போகும் போது கோட் சூட் அணிவது வழக்கம். ஆனால், எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளாதால் இன்று கோட் சூட் அணிந்துள்ளேன். சென்னையில் இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. அதே போல இந்த மாநாட்டின் மூலம் முதலீடுகளும் மழையாக பெய்யும் என நம்புகிறேன்.
கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு தான். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு முன்னுதாரணாக தமிழகம் உள்ளது. திருவள்ளூவா், கனியன் பூங்குன்றனார் பிறந்த மண்ணிற்கு உலக முதலீட்டாளா்கள் வந்துள்ளனா். பொருளாதாக வளா்ச்சியில் அதி விரைவு பாதையில் தமிழ்நாடு பயணித்து வருகிறது. முதலீட்டாளா்கள் மாநாட்டின் மூலம் பொருளாதார வளர்ச்சி மேலும் உயரும் என நம்புகிறேன். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மத்திய அமைச்சருக்கு பாராட்டு தொிவித்துக்கொள்கிறேன்.
பல்வேறு வகையில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அமெரிக்கா, சிங்கபூர் உள்ளிட்ட 9 நாடுகள் பங்குதாரர்களாக இணைந்துள்ளன.பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவு வேகத்தில் தமிழ்நாடு பயணிக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி, தலைமைத்துவம், நீடித்த வளா்ச்சி உள்ளிட்டவை குறித்து இந்த மாநாடு நடக்கிறது. மாநிலத்தின் முதலீடு ஈர்ப்புத்திறனை உலகுக்கு வெளிப்படுத்த முதலீட்டாளா் மாநாடு நடக்கிறது.
தொழில் மயமாக்கல் அத்தியாயத்தில் மகத்தான வளா்ச்சியாக முதலீட்டாளா்கள் மாநாடு அமையவுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முதலீடுகள் குவிகின்றன. ஆட்சி மீது நல்லெண்ணம், சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதால் மட்டுமே முதலீடு குவிகிறது. நாளைய தொழிற் மாற்றங்களை கணித்து வைத்துள்ளோம். பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
பெரியார், அண்ணா, கருணாநிதியை தொடர்ந்து சமூக , பொருளாதார அரசியல் முன்னேற்றத்தில் பெண்களை முன்நிறுத்தி வருகிறோம். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் 200க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. தமிழ்நாட்டில் முதலீடு செய்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அனைவரையும் தமிழக அரசு மதிக்கும்.” என்றாா்.