ஏன் என்.எல்.சியில் வேலைக்கு எடுத்த 1000 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை..? அண்ணாமலையை சீண்டிய சி.வி.சண்முகம்..!
விழுப்பரம் மாவட்டம் மரக்கணாத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் சி.வி. சண்முகம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியையும், அண்ணாமலையையும் குறித்து சரமாரியாக பேசினார். அவர் பேசியதாவது
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருத்தருக்கு இவர் வேலை கொடுப்பாராம்.அண்ணாமலை.10 வருஷமாக யாரு நாட்டை ஆளுறது. பாஜகவின் நரேந்திர மோடி தானே .10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எத்தனை பேருக்கு மத்திய அரசு வேலை கொடுத்துள்ளது..?
ஏன் ‘நெய்வேலி என்.எல்.சியில் சமீபத்தில் வேலைக்கு எடுத்த 1000 பொறியாளர்களில், ஒருவர் கூட தமிழர் இல்லை தமிழ்நாட்டில் இருக்கிற நிறுவனம். நம்ம நிலத்துல இருக்கு. நம்மளோட சொத்து. ஆனால் அந்த நிறுவனத்திலேயே நமக்கு வேலை தர மாட்டார்களாம். இவரு சொல்றாரு.. நமக்கு வேலைவாய்ப்பு கொடுத்துருவாராம்.
அரசுத் துறை நிறுவனங்களை எல்லாம் அதானி, அம்பானியிடம் விற்றது தான் பாஜகவோட ஒரே சாதனை. மதத்தின் பெயரால் அரசியல் செய்ய மட்டும்தான் உங்களுக்கு தெரியும். இவ்வாறு சிவி சண்முகம் பேசினார்.