அரசியலில் ஏன் நுழையவில்லை ? பிறந்தநாளில் மனம் திறந்த கே.ஜே யேசுதாஸ்

பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் ஒரு படத்தில் பாடினார் என்றாலே அந்த படத்திற்கு தனி அந்தஸ்து கிடைத்து விடும்..

அந்த அளவிற்கு கிட்டத்தட்ட தனது காந்தக் குரலால் 80 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார்.. ஒரு கட்டத்தில் அதாவது 90களின் ஆரம்பத்தில் அனைத்து படங்களிலும் அவரது பாடல்கள் தவறாமல் இடம்பெறும் என்கிற நிலை உருவானது. தனது காந்தக் குரலால் உலக அளவில் ரசிகர்களை கட்டிப்போட்ட யேசுதாஸ் நேற்று தனது 84வது பிறந்தநாளை கொண்டாடினார்.எத்தனையோ பிரபலங்கள் சினிமாவில் இருந்து அரசியலுக்குள்ளும் அடி எடுத்து வைத்துள்ளனர். குறிப்பாக இளையராஜா கூட ஒரு தேசியக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் இத்தனை வருடங்களிலும் அரசியல் பக்கமே தான் திரும்பிப் பார்க்காததற்கான காரணம் என்ன என்று பிறந்தநாளில் மனம் திறந்து கூறியுள்ளார் யேசுதாஸ். தற்போது அமெரிக்காவில் தனது மகன் குடும்பத்துடன் வசித்து வரும் அவர் மீடியா ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் அரசியலில் ஏன் சேரவில்லை என்கிற கேள்விக்கு பதில் அளித்தார்.அதில், “எனக்கும் பல அரசியல் கட்சிகளிலிருந்து அழைப்புகள் வந்தன. ஆனால் சிறுவயதிலேயே என் தந்தை என்னிடம் அரசியலில் நுழையக்கூடாது என திட்டவட்டமாக கூறிவிட்டார். நான் அவருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீற விரும்பவில்லை.. சிலர் உங்கள் பெயரில் ரசிகர் மன்றமாவது துவங்குங்கள் என கேட்டனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *