“ரகசிய திருமணத்தை நான் ஏன் மறைக்க வேண்டும்”.. ஸ்ருதிஹாசன் போட்ட ஸ்டோரி..!

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சினிமா உலகின் உச்சநட்சத்திரமான உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஆவர்.

நடிப்பு, இசை, பாடல் என பன்முக திறமை கொண்ட ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

தமிழ் படங்களில் நடித்து வந்த ஸ்ருதிஹாசனுக்கு படங்கள் சரியாக கை கொடுக்கவில்லை. இதனால் தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை ஸ்ருதி ஹாசன்.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடித்த ‘சலார்’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட, வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

ஸ்ருதி ஹாசன் தனது நீண்ட நாள் காதலன் சாந்தனு ஹசாரிகானுடன் மும்பையில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

ஸ்ருதி ஹாசனிடம் எந்த ஒரு தமிழ் படமும் தற்போது கைவசம் இல்லை, தெலுங்கு படங்கள் மற்றும் இண்டிபெண்டெண்ட் ம்யூசிக்கில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் காதலருடனான புகைப்படங்களை பகிர்ந்து வரும் வழக்கம் கொண்டவர் ஸ்ருதி ஹாசன்.

சமீபத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவர் பேட்டியில் ‘ஸ்ருதி ஹாசனின் husband’ என சாந்தனுவை குறிப்பிட்டார். அதனால் ஸ்ருதிஹாசன் தனது காதலன் சாந்தனுவை ரகிசியமாக திருமணம் செய்துவிட்டார் என செய்தி பரவ தொடங்கிவிட்டது.

இந்த வதந்திக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்ட்ரோயில் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், “எனக்கு திருமணம் ஆகவில்லை, அனைத்தையும் ஓப்பனாக சொல்லும் நான் இதை ஏன் மறைக்க போகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *