ஏன் என்னாச்சு.. நமக்கு தெரிந்த உறவுகள் தான் முதுகில் குத்துவாங்க.. வருத்தப்பட்ட நீலிமா ராணி!
சென்னை: தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நீலிமா ராணி, தொடர்ந்து பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மேலும், சின்னத்திரையில் மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள், போன்ற தொடர்களிலும் நடித்து பிரபலமான இவர், நண்பர்களால் சந்தித்த துரோகம் குறித்து வருத்தத்துடன் பேசி உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீரியல் மற்றும் சினிமாவில் நடித்து வரும் நடிகை நீலிமா ராணி, தனது 21 வயதில் அப்போது துணை இயக்குனராக இருந்த இசைவாணன் என்பவரை காதலித்தார். இருவருக்கும் 10 வயது வித்தியாசம் இருந்ததால், நீலிமாவின் குடும்பத்தினர் அவர்களின் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. ஆனால், இசைவாணன் பற்றிவீட்டில் எடுத்துக்கூறி பின் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிப்பு பிஸ்னஸ் என படு பிஸியாக இருக்கிறார்.
நீலிமா ராணி: இந்த நிலையில் நீலிமா ராணி பேசி உள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நமக்கு மிகவும் தெரிந்தவர்கள் தான் நம் முதுகில் குத்துவார்கள், உடனே செய்து விட மாட்டார்கள், அவர்கள் நம்மை போல் இல்லை என்பதற்காக இவ்வாறு அவர்கள் செய்வார்கள். நம்ம பக்கத்திலே இருப்பார்கள், நீங்கள் மிகவும் சூப்பராக இருக்கிறீர்கள், வீட்டையும் பார்த்து கொண்டீர்கள், குழந்தையும் பார்த்து கொள்கிறீர்கள் என்று நம் முன் புகழ்ச்சியாக பேசுவார்கள். அதன்பின்னர் நம் முதுகுக்கு பின் நம்மை பற்றி இகழ்வாக பேசுவார்கள்.இது எனக்கே பலமுறை நடந்துள்ளது.
நெருக்கமானவர்கள் துரோகம்: அவர்கள் புகழ்வதை பார்த்து நானே, ஆமாம் நாம் எல்லாவற்றிலும் வெற்றி கரமாக இருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் நமக்கு முதுகு பின்னால் பேசுவதை கேட்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கும். எனவே நமக்கு நெருக்கமானவர்கள் துரோகம் செய்வார்கள் என்பதை தெரிந்து கொண்டு பழக ஆரம்பிக்க வேண்டும். தயவுசெய்து துரோகத்திற்கு பழக ஆரம்பியுங்கள், அது நம்மை தேடி வரும், வேற வேற முகக்களில், வேற வேற கோணங்களில் வரும், எனவே துரோகம் நமக்கு யாரும் செய்ய மாட்டார்கள் என்று நினைக்காதீர்கள், கண்டிப்பாக உங்களுக்கு நெருக்கமானவர்கள் துரோகம் செய்வார்கள், அந்த துரோகத்தை எதிர்கொள்ள பழகிக் கொள்ளுங்கள்’ என்று அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.