விக்கெட் மெஷின்யா நம்ம ஆளு.. சொந்த மண்ணிலும் சாதித்த அஸ்வின்.. அனில் கும்ப்ளே சாதனைக்கு ஆப்பு!

இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவின் சாதனையை தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்துள்ளார்.

அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் அனுபவ வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்தார். சர்வதேச அளவில் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 9வது வீரர் என்ற பெருமையையும், இந்திய அளவில் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்தார்.

சாதனைகளை படைத்திருந்தாலும், அஸ்வினிடம் இருந்து இன்னும் சிறந்த ஆட்டத்தை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காண முடியவில்லை. ஏனென்றால் இங்கிலாந்து அணியின் டாம் ஹார்ட்லி 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், சொந்த மண்ணில் ஆடி வரும் அஸ்வின் வெறும் 12 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

இதனால் பலரும் அஸ்வின் தனது பவுலிங் ஃபார்மை மீட்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் 46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

பென் டக்கெட் – கிராலி இருவரும் அதிரடியாக ரன்களை சேர்க்க தொடங்கினர். இங்கிலாந்து அணி 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பென் டக்கெட் 15 ரன்களிலும், அடுத்த பந்திலேயே போப் விக்கெட்டையும் வீழ்த்தி அஸ்வின் அசரடித்தார். தொடர்ந்து அபாயகரமான வீரரான ஜோ ரூட்டை 11 ரன்களில் அஸ்வின் வீழ்த்தி இந்திய அணியை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தார்.

இதன் மூலம் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் 352 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், 350 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளே 2வது இடத்திலும், 265 விக்கெட்டுகளுடன் ஹர்பஜன் சிங் 3வது இடத்திலும், 219 விக்கெட்டுகளுடன் கபில் தேவ் 4வது இடத்திலும், 210 விக்கெட்டுகளுடன் ஜடேஜா 5வது இடத்திலும் உள்ளனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *