லிட்டருக்கு 22.30 கிமீ மைலேஜ் தருமா!.. மாருதி கார்கள் இனி விற்பனையான மாதிரிதான்..
கியா (Kia) நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட சொனெட் (Facelift Sonet) கார் மாடலை விரைவில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.
இந்த நிலையில், இந்த கார் மாடலின் பக்கம் ஈர்க்கும் விதமாக நிறுவனம் கார் குறித்த சில முக்கிய விபரங்களை வெளியிட்டு வருகின்றது. அந்தவகையில், சொனெட்டின் மைலேஜ் விபரத்தை அந்நிறுவனம் தற்போது வெளியிட்டு இருக்கின்றது. இதுகுறித்த விரிவான விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
தென்கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia), இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முன்னணி கார் மாடல்களில் சொனெட் (Sonet)-ம் ஒன்றாகும். இது ஓர் சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக காராகும். இந்த கார் மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே கியா நிறுவனம் சொனெட்டின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift Sonet) வெர்ஷனை வெகு விரைவில் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. புதுப்பித்தலின்கீழ் இந்த கார் மாடலில் பல்வேறு புதிய அம்சங்களையும், சில சிறப்பு வசதிகளையும் வழங்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிலையிலேயே இதன் பக்கம் இந்திய கார் காதலர்களின் கவனத்தை ஈர்க்கச் செய்யும் பணியில் கியா களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையில் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் சொனெட் பற்றிய முக்கிய தகவல்களை அது கொஞ்சம் கொஞ்சம் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது. அந்தவகையில், அண்மையில் ஃபேஸ்லிஃப்ட் சொனெட்டில் வழங்கப்பட்டு இருக்கும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரத்தை கியா நிறுவனம் வெளியிட்டது.
இந்த ஏற்கனவே பலரின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக அமைந்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் கூடுதல் கவன ஈர்ப்பை பெறும் வகையில் இந்த கார் மாடலின் மைலேஜ் பற்றிய விபரத்தை கியா வெளியிட்டு இருக்கின்றது. கியாவின் இந்த தயாரிப்பு அதிகம் மைலேஜ் தரக் கூடியதாக உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
உதாரணமாக சொனெட்டின் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் 6 ஐஎம்டி கியர்பாக்ஸைக் கொண்ட ஆப்ஷன் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 22.30 கிமீ மைலேதை வழங்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதுவே அந்த கார் மாடலின் உச்சபட்ச மைலேஜ் திறன் ஆகும். இதற்கு அடுத்தபடியாக அதிகபட்ச மைலேஜை வழங்கும் ஆப்ஷனாக 1.0 லிட்டர் பெட்ரோல் 7 டிசிடி தேர்வு இருக்கின்றது.
இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19.20 கிமீ வரையில் மைலேஜை வழங்கும். இதற்கு அடுத்தபடியாக 1.2 லிட்டர் பெட்ரோல் 5எம்டியும் (ஒரு லிட்டருக்கு 18.83 கிமீ மைலேஜை வழங்கும்), 1.0 லிட்டர் பெட்ரோல் 6 எம்டி (ஒரு லிட்டருக்கு 18.70 கிமீ மைலேஜை வழங்கும்) மற்றும் 1.5 லிட்டர் டீசல் 6ஏடி (ஒரு லிட்டருக்கு 18.60 கிமீ மைலேஜை இது வழங்கும்) இருக்கின்றது.
இந்த காரில் 1.5 லிட்டர் டீசல் எம்டியும் வழங்கப்பட இருக்கின்றது. ஆனால், இதன் மைலேஜ் விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதுகுறித்த விபரத்தை கியா வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கியா நிறுவனம் இந்த புதுப்பிக்கப்பட்ட சொனெட் கார் மாடலுக்கான புக்கிங்குகளை ஏற்கும் பணிகளை நாட்டில் தொடங்கிவிட்டது.
ரூ. 25 ஆயிரம் முன் தொகையில் முன் பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. ஆன்லைன் மற்றும் ஷோரூம் வாயிலாக இந்த காரை புக் செய்துக் கொள்ள முடியும். ஃபேஸ்லிஃப்ட் சொனெட் விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சப்-4 மீட்டர் கார்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும்.
டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திர எக்ஸ்யூவி 300, நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய கார் மாடல்களுக்கே அதன் வருகைப் போட்டியாக அமையும். புதுப்பித்தலின்கீழ் இந்த காரில் சிறப்பம்சங்களை கியா நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், மிக முக்கியமான அம்சங்களாக லெவல் 1 அடாஸ் தொழில்நுட்பம், வென்டிலேட்டட் இருக்கைகள் (முன் பக்கத்தில்), 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், கார் இணைப்பு அம்சம், பவர்டு டிரைவர் இருக்கை என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.