பாஸ்ட் டேக் கார்டு மாரச் 1ம் தேதி முதல் செயல்படுமா? வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் உள்ள வாகனங்களுக்கு பல தனியார் அமைப்புகள் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை விநியோகம் செய்தது போல பேடிஎம் நிறுவனமும் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை அதிக அளவில் விநியோகம் செய்துள்ளன. தற்போது பேடிஎம் பேமென்ட் பேங்க் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக பல தங்கள் ஃபாஸ்ட் கார்டு செயலிழக்க வாய்ப்புள்ளதாக கருதி வருகின்றனர். இதன் உண்மை நிலை என்ன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பேடிஎம் என்ற நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கான தளமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போது ரிசர்வ் வங்கியின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு உள்ளது பேடிஎம் பேமென்ட் பேங்கில் உள்ள முறையற்ற தன்மை காரணமாக ரிசர்வ் பேங்க் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்கள் ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

பேடிஎம் நிறுவனத்தின் துணை அமைப்பான ஒன் 97 கம்யூனிகேஷன் என்ற நிறுவனம் இதற்கு ரிசர்வ் வங்கி வரும் மார்ச் மாதம் முதல் புதிதாக வரும் டெபாசிட்களை இயக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த பிரச்சனை பெரும் பிரச்சினையாக இருக்கும் நிலையில் பேடிஎம் பேமென்ட் பேங்க் மூலம் பல்வேறு நபர்கள் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை தங்கள் வாகனங்களுக்காக வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

மத்திய அரசு சொன்னது போல இப்படியாக வழங்கப்பட்ட ஃபாஸ்ட் டேக் கார்டுகளை பலர் கேஒய்சி செய்து முறையாக பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசு ஃபாஸ்ட் டேக் கார்டுகளை கட்டாயம் கேஒய்சி செய்ய வேண்டும். கேஒய்சி செய்யப்படாத கார்டுகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு செயலிழக்கம் அல்லது பிளாக் லிஸ்ட் செய்யப்படும் என அறிவித்திருந்தது.

ஒரு வாகனத்திற்கு ஒரு ஃபாஸ்ட் டேக் கார்டு தான் இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இந்த திட்டத்தை அமல்படுத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தற்போது பிப்ரவரி மாத கடைசி வரை கேஒய்சி செய்வதற்கான வாய்ப்பையும் வழங்கி உள்ளது. மார்ச் மாதம் முதல் கேஒய்சி செய்யப்படாத ஃபாஸ்ட் டேக் கார்டுகள் எல்லாம் செயலிழக்க அல்லது பிளாக் லிஸ்ட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேடிஎம் பேங்க் மீது ரிசர்வ் வங்கி வரும் மார்ச் 1ம் தேதி முதல் புதிய டெபாசிட்களை செய்ய வேண்டாம் என உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது பேடிஎம் பேமென்ட் பேங்க் மூலம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை வாங்கியவர்கள் அதைத் தொடர்ந்து பயன்படுத்தலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். இது தொடர்ந்து ஒர்க் ஆகுமா என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை. அவர்களுக்கான விளக்கத்தை தான் இங்கே நாம் வழங்கி உள்ளோம்.

பேடிஎம் பேமென்ட் பேங்க் செயல் முடக்கப்பட்டால் அதன் பிறகு பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டை பயன்படுத்த முடியுமா என பலர் கேட்டு வருகின்றனர். அதற்கு பதில் ஆம், இல்லை என இரண்டுமே சொல்லலாம். பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டில் உங்களிடம் பேலன்ஸ் இருந்தால் அதை நீங்கள் பயன்படுத்த முடியும்

அந்த பேலன்ஸ் தீரும் வரை நீங்கள் மார்ச் மாதம் 1ம் தேதிக்கு பிறகும் பயன்படுத்த முடியும். ரிசர்வ் வங்கி மார்ச் மாதம் 1ம் தேதியிலிருந்து ரீசார்ஜ் செய்வதற்கு தான் தடை செய்து உள்ளதை தவிர இருக்கும் பேலன்ஸை பயன்படுத்த எந்த தடையும் இல்லை. அதனால் நீங்கள் அதை பயன்படுத்த எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் பேலன்ஸ் தீர்ந்த பிறகு உங்களால் பயன்படுத்த முடியாது. மீண்டும் ரீசார்ஜ் செய்ய மார்ச் மாதம் ஒன்றாம் தேதிக்கு பிறகு முடியாது. சரி அப்படி என்றால் என்னுடைய ஃபாஸ்ட் டேக் கார்டை பேடிஎம் பேமென்ட் பேங்கில் இருந்து வேறு வங்கிக்கு மாற்றிக் கொள்ள முடியுமா என்றால் அதுவும் முடியாது.

நீங்கள் கார்டை மாற்ற வேண்டுமென்றால் பேடிஎம் பேமென்ட் பேங்கில் இணைக்கப்பட்ட கார்டை முற்றிலுமாக விட்டுவிட்டு வேறு வங்கியில் இருந்து புதிய கார்டை தான் பெற முடியும். இருக்கும் கார்டை மாற்றுவதற்கான சாத்திய கூறுகள் தற்போது இல்லை. இதற்கான வாயப்பை இனி வழங்க கூட வாய்ப்புள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இல்லை.

அதனால் ஏற்கனவே பேடிஎம் பேமென்ட் பேங்க் மூலம் ரீசார்ஜ் செய்து பயன்படுத்தி வருபவர்கள் தங்கள் பாஸ்டர் கார்டை புதிய வங்கிக்கு மாற்றிக்கொள்வதுதான் ஒரு நல்ல ஐடியாவாக இருக்கும். பேலன்ஸ் தீரும் வரை பேடிஎம் பேமென்ட் பேங்க் ஃபாஸ்ட் டேக் காரை பயன்படுத்துவதில் எந்த சிக்கலும் இருக்காது. மார்ச் மாதத்திற்கு பிறகு புதிய ஃபாஸ்ட் டேக் கார்டை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

உங்கள் பேடிஎம் பேமென்ட் பேங்க் கணக்கில் இணைக்கப்பட்ட கார்டை வேறு வங்கி மூலம் ரீசார்ஜ் செய்யலாமா என சந்தேகம் இருக்கிறது. இதற்கு பேடிஎம் வெளியிட உள்ள அப்டேட்டை பொறுத்துதான் பதில் கூற முடியும். தற்போது வரை பேடிஎம் பேமென்ட் பேங்க் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு மூலம் மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும். இதற்கான அப்டேட்டை பேடிஎம் விரைவில் வெளியிட்டால் இதற்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

வரும் மார்ச் மாதம் முதல் பேடிஎம் நிறுவனத்தின் பேமெண்ட் பேங்க் பயனர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட உள்ளதால் பயனர்கள் பாதிக்காத வகையில் இதற்கு தீர்வு கொண்டு வர மத்திய வங்கி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக ஒரு தீர்வை கொண்டு வரும் பட்சத்தில் இவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து இந்த சேவைகளை பயன்படுத்த வாய்ப்புகள் வழங்கவும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *