5 ஸ்டார் ரேட்டிங்கை பெறுமா பஞ்ச்.இவி? பாரத் என்கேப் சோதனைக்கு உட்படுத்தப்போறாங்க!

டாடா நிறுவனம் தனது சஃபாரி மற்றும் ஹாரியர் காரைத் தொடர்ந்து நேற்று வெளியான டாடா பஞ்ச். இவி காரையும் பாரத் என்கேப் சோதனைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதை டாடா மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவின் நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா உறுதி செய்துள்ளார். விரைவில் இந்த காரின் பாதுகாப்பு குறித்த விரிவான விபரங்கள் எல்லாம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நிறுவனம் தனது பஞ்சு காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக பஞ்ச்.இவி என்ற காரை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. ரூபாய் 10.99 லட்சம் என்ற விலையில் இந்த கார் அறிமுகமான நிலையில் மக்கள் மத்தியில் இந்த காரை வாங்குவதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பலர் இந்த காரை வாங்க புக்கிங் செய்து வருகின்றனர்.

சிறப்பான விற்பனையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில். தற்போது டாடா பஞ்ச் காரை போலவே இந்த காரும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காராக இருக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதை நிரூபணம் செய்ய தற்போது டாடா நிறுவனம் அடுத்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் குஷியில் இருக்கிறார்கள்.

டாடா நிறுவனம் தனது பஞ்ச்.இவி காரை பாரத் என்கேப் டெஸ்ட் சோதனைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக பாரத் எலெக்ட்ரிக் மொபிலிட்டியின் நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாதுகாப்பில் இந்த எலெக்ட்ரிக் கார் எவ்வளவு தூரம் சிறப்பாக இருக்கிறது என நமக்கு தெரிய வரும். டாடா பஞ்ச் பெட்ரோல் இன்ஜின் கார் குளோபல் என்கேப் சோதனையில் 5 ஸ்டார்களை பெற்ற காராக இருந்தது.

டாடா பஞ்ச் பெட்ரோல் இன்ஜின் கார் ஆல்ஃபா என்ற பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட கார் ஆகும். ஆனால் டாடா பஞ்ச். இவி கார் முற்றிலுமாக ஆக்டிவ்.இவி என்ற வேறு ஒரு பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட கார் என்பதால். பெட்ரோல் இன்ஜின் காரை போலவே இந்த காரம் 5 ஸ்டார் ரேட்டிங் பெரும் என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை. ஆனால் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெறவும் ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன.

டாடா எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா கூறும் போது: ” டாடா பஞ்ச் பெட்ரோல் இன்ஜின் கார் ஏற்கனவே கிராஷ் டெஸ்ட் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றது. பஞ்ச்.இவி கார் அதைவிட அதிக திறன் வாய்ந்ததாக நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதை முழுவதுமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பிளாட்பார்மில் வைத்து உருவாக்கியுள்ளோம். அனைத்து அம்சங்களும் பாதுகாப்பு வசதிகளும் இருக்கும்படி இந்த காரை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.” எனக் கூறியுள்ளார்.

டாடா பஞ்ச்.இவி காரை பொறுத்தவரை மொத்தம் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது. மீடியம் ரேஞ்ச் பேட்டரியை பொருத்தவரை 25கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 315கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக லாங் ரேஞ்ச் பேட்டரி பொருத்தவரை 35கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு தடவை சார்ஜ் செய்தால் 421கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கார் மொத்தம் ஸ்மார்ட், ஸ்மார்ட் பிளஸ், அட்வெஞ்சர், எம்பவர்டு, எம்பவர்டு பிளஸ் ஆகிய வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் அட்வெஞ்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு பிளஸ் ஆகிய வேரியண்ட்களில் மட்டும் சன்ரூஃப் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. சன்ரூஃப் காரை வாங்க வேண்டும் என்றால் கூடுதலாக ரூபாய் 50,000 செலுத்த வேண்டும். மேலும் இதே வேரியன்டுகளுக்கு லாக் ரேஞ்ச் பேட்டரி ஆப்ஷன் உடன் வாங்கினால் ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷன் ஆக வழங்கப்படுகிறது.

டாட்டா பஞ்ச்.இவி கார் மார்க்கெட்டில் நேரடியாக சிற்றுண்டி காருக்கு போட்டியாக களம் இறங்குகிறது. அதேநேரம் மிக குறைவான விலையில் இந்த கார் களமிறங்கியுள்ளதால் குறைந்த விலை எலெக்ட்ரிக் காரை வாங்க விரும்புபவருக்கு இந்த கார் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். எலெக்ட்ரிக் காரை முதன்முறையாக வாங்குபவர்கள் நிச்சயம் இந்த காரை தேர்வு செய்யலாம்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *