பணம் வந்து கொட்டோ கொட்டனும்னு கொட்டனுமா? இந்த விஷயங்களை செய்துப் பாருங்க…

கடினமாக உழைத்தாலும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை, போதுமான பணம் வரவில்லை என்றோ, செல்வம் வந்த வழியே போய் விடுகிறது என்றும் கவலைப்படுபவரா நீங்கள்? இந்தக் கவலை நீண்ட காலம் தொடர்ந்தால், மனம் சோர்ந்து போய்விடுகிறது. இதற்கு காரணம் என்ன என்பதை தெரிந்து அதை சரி செய்யலாம். அதை தெரிந்துக் கொள்வது மிகவும் சிரமமானது. எனவே, உங்கள் வீட்டில் பணம் நிலைத்து நிற்க இந்த உதவிக் குறிப்புகள் உதவலாம்.

நம் அன்றாட வாழ்க்கையில் செய்யும் சிறிய தவறுகளால் வீட்டில் செல்வம் தங்காமல் போகலாம். உழைப்பின் முழுப் பலனையும் பெற தடுக்கும் சில காரணங்கள் வாழ்க்கையில் சில சமயம் விரக்தியையும் ஏற்படுத்துகிறது. கடினமாக உழைத்தும் விரும்பிய வெற்றி கிடைக்காமல் போனால், கவலைதானே மிஞ்சும்?

பணம் வீட்டில் தங்க தவிர்க்க வேண்டிய செயல்கள்
உணவு உண்டபின் காலி தட்டை கழுவாமல் வைப்பதும், கையை அலம்பாமல், எச்சிலாக காயவிடுவதும் அன்னை லட்சுமிக்கு பிடிக்காது. இதுபோன்ற செயல்கள் நடைபெறும் வீட்டில் லட்சுமி வாசம் செய்யமாட்டார். நோய் ஏற்படவும், தேவையற்ற செலவுகளால் வீண பண விரயத்தையும் தவிர்க்க உணவு உண்ட பின் கையை உடனே கழுவவும். உணவு உண்டவுடன் பாத்திரங்களை நகர்த்தி விட்டு, உணவு உண்ட இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

உணவு உண்ணும் போது தெற்கு அல்லது தென்மேற்கு முகமாக அமர்ந்து சாப்பிடுபவர்களுக்கு நோய் ஏற்பட்டு, பணம் மருத்துவச் செலவாக கரையும். ஆரோக்கியமாக இருக்க விரும்புபவர்கள் உணவு சாப்பிடும்போது தெற்கு மற்றும் தென்மேற்கு திசையை பார்த்தவாறு அமர்ந்து உணவு உண்ணக்கூடாது.

ஊறுகாயில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்பது நம்பிக்கை, ஊறுகாயை வீண் செய்தால், அதாவது தட்டில் ஊறுகாயை போட்டு அதை உண்ணாமல், குப்பையில் போடுவது லட்சுமியை அவமதிக்கும் செயலாக கருதப்படுகிறது.எனவே, தேவையான அளவு ஊறுகாயை மட்டும் உங்கள் தட்டில் போடவும்.

பணம் வீட்டிற்குக் வந்ததும், அதே நாளில் பணத்தை செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டும். பணம் கிடைத்தால் அதை கடவுளிடம் வைத்தபின் பணப்பெட்டியில் கொண்டு வைத்து விடவும்.

வீட்டில் தேவையில்லாத பொருட்களை வைக்க வேண்டாம். அத்தியாவசிய பொருட்களை மட்டும் வைக்கவும், சூரிய உதயத்திற்கு பிறகும், சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.

பணப்பெட்டியை எங்கே வைத்தால் வீட்டில் பணம் தங்கும்?

பணப்பெட்டி அல்லது பணம் வைக்கும் அலமாரி தெற்கு திசை நோக்கி வைக்கக்கூடாது. அப்படி இருந்தால், வீட்டில் பணம் தங்காது. வட கிழக்கு திசையை நோக்கி பண பெட்டியை வைத்தால் வரவுக்கு மிறிய செலவு வரும்.

தென் கிழக்கில் பண பெட்டியை வைத்தால் பணம் வீட்டில் தங்காது. பூஜை அறையில் சாமி படங்களை மேற்கு திசை நோக்கி .வைத்தால் வரவும் செலவும் சரியாக இருக்கும். அதேபோல, பூஜை அறையில் பணம் வைத்தால், வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும்.

பண பெட்டியை அல்லது பணம் வைக்கும் அலமாரியை வடக்கு திசைஅல்லது நேர் கிழக்கு திசை நோக்கி வைப்பது பணத்தை வீட்டில் தக்க வைக்கும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *