அதிக கல்லூரிகளை கொண்ட மாநிலத்தில் தமிழ்நாடு 5வது இடம்.. உத்தர பிரதேசத்திற்கு முதலிடம்..!!

கில இந்திய உயர்கல்வி ஆய்வின்படி (AISHE) இந்திய நகரங்களில் பெங்களூரு நகர்ப்புறத்தில் அதிக கல்லூரிகள் உள்ளன என கூறுகிறது.
ஸ்டார்ட்அப் கலாச்சாரம் மற்றும் பன்னாட்டு தொழில்நுட்ப பூங்காக்களுக்கு பெயர் பெற்ற பெங்களூரு நகரத்தில் மொத்தம் 1,106 கல்லூரிகள் உள்ளன.
ஜெய்ப்பூரில் 703 கல்லூரிகள் உள்ளன, இதை தொடர்ந்து, ஹைதராபாத்தில் 491, புனேயில் 475, பிரயாக்ராஜ்ஜில் 398 என AISHE சமீபத்தில் வெளியிட்ட 2021-22 அறிக்கையில் தெரிவித்துள்ளது. கல்லூரி அடர்த்தி எனப்படும் 18-23 வயதுக்குட்பட்ட ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு தகுதியுள்ள கல்லூரிகளின் பட்டியலில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. கல்லூரி அடர்த்தி பிரிவில் கர்நாடகம் (66), தெலுங்கானா (52), ஆந்திரப் பிரதேசம் (49), இமாச்சலப் பிரதேசம் (47), புதுச்சேரி (53), கேரளம் (46) ஆகியவை ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளைக் கொண்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்,” என்று அறிக்கை கூறுகிறது. கர்நாடகத்தில் 4,430 கல்லூரிகள் உள்ளன, உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவை அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆனால், கர்நாடகத்தில்ல் 704 அரசு கல்லூரிகள் மட்டுமே உள்ளன. கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட உயர்கல்விக்கான அரசாங்கத்தின் அகில இந்திய கணக்கெடுப்பு 2021-22 இன் படி, உத்தரபிரதேசத்தில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகள் உள்ளன, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளன. டாப் 3 மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தான், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், குஜராத், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய ஏழு மாநிலங்கள் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளைக் கொண்ட டாப் 10 மாநிலங்களில் இடம்பெற்றுள்ளன. 2011 முதல் நடத்தப்பட்ட AISHE கணக்கெடுப்பு, இந்தியாவில் உயர்கல்வியை வழங்கும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் உள்ளடக்கியது. 328 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 45,473 கல்லூரிகள் AISHE இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 42,825 கல்லூரிகளில் 2021-22 கணக்கெடுப்பில் பதிலளித்தனர். இந்த அறிக்கையின்படி, உத்தரபிரதேசத்தில் 8,375 கல்லூரிகள் உள்ளன — முந்தைய ஆண்டில் இதன் எண்ணிக்கை 8,114 கல்லூரிகளாக இருந்தன. மகாராஷ்டிரா 4,692 கல்லூரிகளுடன் இரண்டாவது இடத்திலும், கர்நாடகா 4,430 கல்லூரிகளுடன் மூன்றாவது இடத்திலும், ராஜஸ்தான் 3,934 கல்லூரிகளுடன் நான்காவது இடத்திலும், 2,829 கல்லூரிகளுடன் தமிழகம் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2,702 கல்லூரிகளுடன் மத்திய பிரதேசம் ஆறாவது இடத்தில் உள்ளது. ஆந்திரப் பிரதேசம் 2,602 கல்லூரிகளுடன் ஏழாவது இடத்தையும், எட்டாவது இடத்தில் உள்ள குஜராத்தில் 2,395 கல்லூரிகளும் உள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *