போஸ்ட் ஆபீஸோட இந்த திட்டத்தால்.. உங்களால் ரூ.1 கோடி பணம் சேர்க்க முடியும்! முழுமையான வழிகாட்டி
பணி ஓய்வு பெறும் போது உங்க கையில 1 கோடி ரூபாய் இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்களா. அதுக்கு முதல்ல முதலீடு பண்ணுங்க. பாதுகாப்பான நிலையான வட்டி வருமானம் தரக்கூடிய திட்டத்த தேர்வு செஞ்சு முதலீடு பண்ணா கண்டிப்பா 1 கோடி ரூபாய் ரொக்கம் கிடைக்கும். அப்படி ஒரு போஸ்ட் ஆபிஸ் திட்டம் குறித்து இதுல விரிவாக பார்க்கலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி போன்ற தபால் அலுவலகம் முதலீட்டு திட்டங்களில் ஓய்வூதிய இலக்கான ஒரு கோடி ரூபாயை அடைவது சாத்தியமாகும். ஒருவர் தொடர்ச்சியாக PPF திட்டத்தில் முதலீடு கோடீஸ்வரர் என்று இலக்கை அடைய முடியும். இது எப்படி சாத்தியம் என்பதை கணக்கீடுகள் மூலம் இங்கு பார்க்கலாம், அதற்கு முன்பாக PPFஇன் அடிப்படை அம்சங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
ஆண்டுக்கு 7.1% வட்டி தரக்கூடிய திட்டம் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இதில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.இந்த திட்டத்தில் ஒரு நபர் 1.50 லட்சம் வரை ஒரு ஆண்டுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் செய்யும் முதலீடுக்கு வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சி பிரிவின் கீழ் வரி சலுகை கிடைக்கும்.
பொது வருங்கால வைப்பு நிதியில் அதிகபட்சமாக ஒரு 1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். எனவே அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
முதல் 15 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 1.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் நீங்கள் செய்த முதலீட்டு தொகை 22,50,000 ரூபாயாக இருக்கும். இந்த தொகைக்கு கூட்டு வட்டி முறையில் 15 ஆண்டுகளில் உங்களுக்கு கிடைக்கும் வட்டி தொகை 18,18,209 ரூபாயாகும்.
எனவே 15 ஆண்டுகளில் உங்களிடம் 40 ,68,209 ரூபாய் இருக்கும். இப்போது நீங்கள் மேலும் 5 ஆண்டுகளுக்கு முதலீட்டை நீட்டிக்க முடியும். அதாவது 15 ஆண்டுகளை தாண்டி அடுத்த 5 ஆண்டுகளுக்கு இதே திட்டத்தில் 1.50 லட்சம் முதலீடு செய்யுங்கள். எனவே 20 ஆண்டுகளில் உங்களின் மொத்த முதலீடு 30,00,000.
இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வட்டி 36,58,288. மொத்தமாகும் உங்களுக்கு 66,58,288 ரூபாய் கிடைக்கும்.
மேலும் இரண்டு முறை 5 ஆண்டுகளுக்கு முதலீட்டை நீட்டித்து கொள்ளுங்கள். இப்படி மொத்தம் 30 ஆண்டுகளில் நீங்கள் செய்த முதலீடு 37,50,000 ஆகவும் அதில் கிடைக்கும் வட்டி 65,58,015 ரூபாயாகவும் இருக்கும்.
எனவே 30 ஆண்டுகளுக்கு பின் உங்களுக்கு 1.03 கோடி ரூபாய் ரொக்கம் கிடைக்கும்.