கணவர் பார்க்கக்கூடாது என 4 வயது மகனை கொன்ற பெண் CEO! விசாரணையில் சிக்கிய முக்கிய ஆதாரம்
கோவாவில் தனது 4 வயது மகனை பெண் CEO கொலை செய்த சம்பவம் தொடர்பில், அவரது கணவர் விசாரணையில் சில விடயங்களை தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் வசித்து வந்த சுசனா சேத் (39) என்ற பெண், தனது 4 வயது மகனை இரக்கமின்றி கொலை செய்து சூட்கேசில் அடைத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.
சுசனாவை கைது செய்த பொலிஸார் அவரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். அப்போது அவரது கைப்பையில் இருந்து கிழிந்த tissue paper ஒன்றை கைப்பற்றினர்.
அதில், தன் கணவர் மகனை சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது தனக்கு பிடிக்கவில்லை என கண் மையால் எழுதியிருந்தது.
பின்னர் அதனை பொலிஸார் தடவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுசனா சேத், நீதிபதியின் உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சுசனாவின் கணவர் வெங்கட்ராமன், கோவாவில் உள்ள காவல் நிலையத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜரானார்.
அவர் பொலிசாரிடம், ‘எனக்கும் என் மனைவி சுசனா சேத்துக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எனது மகனை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தது. ஆனால் அதற்கு எனது மனைவி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
மேலும், கடந்த 5 நாட்களாக அவர் எனது மகனை சந்திக்க அனுமதி அளிக்கவில்லை. எனது மகன் கொலை செய்யப்பட்டபோது, நான் இந்தோசினேசியாவில் உள்ள ஜகார்த்தாவில் இருந்தேன்’ என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.