கடனை திருப்பி செலுத்துவதில் ஆண்களை காட்டிலும் பொறுப்புடன் இருக்கும் பெண்கள்… ஆய்வில் தகவல்
சமீபத்தில் நடந்த சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி ஃபின்டெக் பிளாட்ஃபார்ம் Fibe, பெண் கடன் வாங்குபவர்களை குறித்து சில ஆச்சரியமூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது. EMI -க்களை சரியான நேரத்தில் செலுத்துவதில் ஆண் கடன் வாங்குபவர்களை காட்டிலும் பெண் கடன் வாங்குபவர்கள் 10% அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வு மூலமாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக கடன் விஷயத்தில் பெண்கள் ஆண்களை காட்டிலும் பொறுப்புடன் நடந்து கொள்வது தெரிய வந்திருக்கிறது. கடனை பொறுத்தவரை பெண்கள் மனசாட்சியுடன் கூடிய அணுகுமுறையை மேற்கொள்வதாகவும், எச்சரிக்கையாக முடிவுகளை எடுக்கக்கூடிய பழக்கங்களை கொண்டவர்களாகவும் அமைவது இந்த ஆய்வின் மூலமாக வெளிப்படுகிறது.
இதன் காரணமாக கடன் விஷயத்தில் பெண்கள் ஆண்களை காட்டிலும் பொறுப்புடன் நடந்து கொள்வது தெரிய வந்திருக்கிறது. கடனை பொறுத்தவரை பெண்கள் மனசாட்சியுடன் கூடிய அணுகுமுறையை மேற்கொள்வதாகவும், எச்சரிக்கையாக முடிவுகளை எடுக்கக்கூடிய பழக்கங்களை கொண்டவர்களாகவும் அமைவது இந்த ஆய்வின் மூலமாக வெளிப்படுகிறது.
மறுபுறம் புதிதாக கடன் வாங்கும் ஆண்களின் எண்ணிக்கை 22% குறைந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது 2019 ஆம் ஆண்டில் 82 சதவீதம் இருந்த இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 60 சதவீதமாக குறைந்துள்ளது. அனைத்து பெண் கடன் வாங்குபவர்களை கருத்தில் கொள்ளும் பொழுது, NTC கஸ்டமர்கள் 32 சதவீதம் என்ற மிகப்பெரிய பங்கு வகிக்கின்றனர்.
கிரெடிட் கார்டு வைத்திருக்கக் கூடிய மற்றும் வழக்கமான முறையில் லோன்களை வாங்கக்கூடிய பெண்கள் 13% ஆகவும், அதுவே கிரெடிட் கார்டு இல்லாமல் ஆனால் லோன் பெறக்கூடிய பெண்கள் 18 சதவீத எண்ணிக்கையையும் வகிக்கின்றனர். பெண் கடன் வாங்குபவர்களின் இந்த வளர்ச்சி போக்கு தங்களுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் மேற்கொள்ளும் பல்வேறு விதமான முயற்சிகளில் ஒன்றாக இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. கடன் விஷயத்தில் பெண்களின் பொறுப்புணர்வை பறைசாற்றும் அதே வேளையில் முதல் முறையாக கடன் வாங்கக்கூடிய NTC கஸ்டமர்களின் வயது கடந்த 5 வருடங்களில் அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது. முதல்முறையாக கடன் வாங்கக்கூடிய கஸ்டமர்களின் வயது 2019 ஆம் ஆண்டில் 26 ஆக இருந்தது. இதுவே தற்போது 2023 ஆம் ஆண்டில் இது 31 வயதாக அதிகரித்துள்ளது.
“வளர்ந்து வரும் நுகர்வோரின் கடன் வாங்கும் நடத்தையை புரிந்து கொண்டு எங்களுடைய கஸ்டமர்களின் பல்வேறு விதமான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எங்களுடைய சேவைகள் மற்றும் ப்ராடக்டுகள் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த ஆய்வை மேற்கொண்டோம். கடன் தேவையின் அதிகரிப்பானது, கடன்களை திருப்பிச் செலுத்தும் திறனும், புதிய பொருளாதார சுதந்திரம் மற்றும் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான துணிச்சலைக் காட்டுகிறது.” என்று ஃபைபின் கோ ஃபவுண்டர் மற்றும் CEO அக்ஷய் மெகருத்ரா கூறுகிறார்.