புற்றுநோயால் அவதி.. உலக புகழ்பெற்ற கவிஞர் முனவ்வர் ராணா காலமானார் – சோகத்தில் மூழ்கிய கலையுலகம்!

71 வயதான அவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (SGPGIMS) அனுமதிக்கப்பட்டார். அவர் நீண்ட நாட்களாக தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக ராணாவின் மகள் சுமையா ராணா செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று ஜனவரி 14ம் தேதி அவர் காலமானார்.

யார் இந்த முனவர் ராணா?

கடந்த நவம்பர் 26, 1952ல், உத்தரபிரதேசத்தின் ரேபரேலியில் பிறந்த ராணா, கஜல்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். உருது இலக்கியம் மற்றும் கவிதைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக பரவலான பாராட்டைப் பெற்றார் அவர். பாரசீக மற்றும் அரேபிய தாக்கங்களிலிருந்து விலகி, ஹிந்தி மற்றும் அவதி வெளிப்பாடுகளை உள்ளடக்கியதன் காரணமாக அவரது கவிதை அணுகுமுறை தனித்து நின்றது. அவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது வாழ்க்கை முழுவதும், ராணா தனது கவிதைத் தொகுப்பான ‘ஷஹ்தபா’க்காக 2014ல் மதிப்பிற்குரிய சாகித்ய அகாடமி விருது உட்பட எண்ணற்ற கௌரவங்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அதை பெற்ற ஒரு வருடம் கழித்து, நாட்டில் “அதிகரிக்கும் பிரச்சனை” குறித்த உண்டாகும் அச்சத்தை மேற்கோள் காட்டி, அந்த விருதைத் திருப்பித் தர முடிவு செய்தார்.

அவர் அமீர் குஸ்ரோ விருது, மிர் தாகி மிர் விருது, காலிப் விருது, டாக்டர் ஜாகிர் ஹுசைன் விருது மற்றும் சரஸ்வதி சமாஜ் விருது ஆகியவற்றையும் பெற்றவர். இந்த மாபெரும் கவிஞரின் மறைவுக்கு உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஃபக்ருல் ஹசன் சந்த், முனவ்வர் ராணா இந்தியாவின் பெயரை மிக உயரத்திற்கு கொண்டு சென்றார். “அவரது சோகமான மறைவுக்கு சமாஜ்வாடி கட்சி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது. அவரது மறைவு நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பு” என்று அவர் மேலும் கூறினார்.

https://twitter.com/singhrajaram_/status/1746604808889647538

மேலும் பல ட்விட்டர் பயனர்கள், ராணாவின் தாக்கம் நிறைந்த கவிதை ஆழமாக எதிரொலித்தது மேலும் அவர் கடினமான காலங்களில் சவால்களை எதிர்கொண்டு பிரதிபலித்த ஒரு சிறந்த ஆன்மா என்று கூறி அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *