சிலம்பத்தில் உலக சாதனை… கோவை சிறுமிக்கு குவியும் பாராட்டு!
coimbatore: கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல்ராஜ் மற்றும் இசைவாணி தம்பதியர் இவர்களுக்கு ஏழு வயதான அஹல்யா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுமி அகல்யா கடந்த இரண்டு ஆண்டுகளாக சிலம்பம் கற்று வருகிறார். இந்த இரண்டு வருடத்தில் சிலம்பம் சுற்றி இந்தியாஸ் வேர்ல்ட் ரெக்கார்ட், இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், வேர்ல்ட் வைட் ரெக்கார்ட், ஐன்ஸ்டீன் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற 4 உலக சாதனையை செய்துள்ளார்.
இந்நிலையில், தஞ்சாவூரில் நடைபெற்ற லின்கன் வேர்ல்ட் ரெக்கார்ட் நிகழ்வில் கலந்து கொண்ட சிறுமி அஹல்யா ஒரு நிமிடத்தில் 100 முறை கண்களை கட்டி பல்வேறு மச்சாசனம், சக்ராசனம், ஹாலசனம் ஆகிய யோகாசனங்கள் செய்து கொண்டே சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை செய்துள்ளார். இந்த சாதனையை லிங்கன் வேர்ல்டு ரெக்கார்ட் புத்தகம் அங்கீகரித்துள்ளது இதற்கான சான்றிதழை தஞ்சாவூர் மேயர் ராமநாதன் சிறுமி அகல்யாவுக்கு வழங்கினார்.