மூன்றாம் உலகப் போர் விரைவில்: புடின் எச்சரிக்கையால் அச்சத்தில் உலகநாடுகள்

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக் கொள்வது உலகம் மூன்றாம் உலகப் போரை எதிர்கொள்வதற்கு வெகு அருகில் நிற்கிறது என்று அர்த்தம் என ரஷ்யாவின் புதிய ஜனாதிபதி விளாடிமீர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 88சதவீத வாக்குகளை பெற்று அந்நாட்டின் ஜனாதிபதியாக 5வது முறை புடின் தெரிவி செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம், ரஷ்ய வரலாற்றில் 200 ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்டாலினுக்குப் பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

தேர்தலில் வெற்றி
உக்ரைன் போருக்கு மத்தியில் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இது சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

இந்நிலையில், தேர்தலில் வெற்றியை பெற்றதை தொடர்ந்து புதின் ஆற்றிய முதல் உரையில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக் கொள்வது என்பது இந்த உலகம் மூன்றாம் உலகப் போரை எதிர்கொள்வதற்கு வெகு அருகில் நிற்கிறது என்று அர்த்தம்.

அத்தகைய சூழலை யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால் இந்த நவீன உலகத்தில் எதுவும் சாத்தியமே. உக்ரைனில் நேட்டோ படைகள் உள்ளன.

அமெரிக்காவின் ஜனநாயகம்
அவற்றில் ஏற்கனவே ஆங்கிலம் பேசும் வீரர்களும், பிரெஞ்சு பேசும் வீரர்களும் உள்ளனர். அவர்கள் அங்கே கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் வீரர்களை திரும்பப் பெற்றுக் கொள்வது நல்லது. அமெரிக்காவில் ஜனநாயகம் இல்லை. அங்கே இப்போது மிகப்பெரிய குளறுபடியான சூழல் மட்டுமே நிலவுகிறது.

நிலவரம் அப்படியிருக்க அவர்கள் ரஷ்ய தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்று போலியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நகைச்சுவையாக உள்ளது.” என்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *