அயோத்தியை சென்றடைந்தது உலகத்திலேயே பெரிய பூட்டு, லட்டு!!!

வரும் திங்கட்கிழமை அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில், உலகிலேயே பெரிய பூட்டும், உலகிலேயே பெரிய லட்டும் அயோத்தியை சென்றடைந்தது.

ராமர் கோயிலுக்காக உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் இருந்து 400 கிலோ எடையில் பிரமாண்ட பூட்டும் சாவியும் தயாரிக்கப்பட்டது. ராமர் கோயில் திறப்பு விழா நடக்க உள்ள நிலையில் அந்த பூட்டு இன்று அயோத்தியை அடைந்தது.

பூட்டு சாவி செய்யும் தொழில் அலிகாரில் அதிகம் செய்யப்படும் தொழிலாகும். ராமர் கோயிலுக்கு மிகப்பெரிய பூட்டு அனுப்பி வைத்துள்ளதால் அலிகாரின் பூட்டு தொழில் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

சத்யபிரகாஷ் சர்மா என்பவரும், அவரின் மனைவி ருக்மினி சர்மா ஆகிய தம்பதி இணைந்து இந்த பூட்டை உருவாக்கியுள்ளனர். இந்த பூட்டு சாவி உருவாக்கும் பணிகள் 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. ஆனால் சத்ய பிரகாஷ் அண்மையில் உயிரிழந்துவிட்டார். எனினும் கணவரின் ஆசைப்படி செய்து முடிக்கப்பட்ட பூட்டை நோரங்காபாத்தில் இருந்து அயோத்யாவுக்கு மனைவி ருக்மினி லாரி ஒன்றில் அனுப்பி வைத்தார். அப்போது பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டனர்.

பூட்டைப்போலவே மற்றொரு பிரமாண்டம் ஹைதராபாத்தில் இருந்து அயோத்திக்கு சென்றுள்ளது. அது உலகிலேயே பெரிய லட்டு பிரசாதம். ஐதராபாத்தைச் சேர்ந்த நாகபூசணம் ரெட்டி என்ற நபர் கேட்டரிங் தொழில் நடத்தி வருகிறார். உணவு உற்பத்தி தொழிலுக்கான பிரத்யேக சான்றும் அவர் பெற்றுள்ளார். ராமர் கோயிலுக்கு பிரசாதமாக லட்டு அனுப்ப முடிவு செய்த நாகபூஷனம் ரெட்டி 1265 கிலோ எடையில் பிரமாண்ட லட்டை உருவாக்கியுள்ளார். ஒரு மாதம் வரை கெட்டுப்போகாத வகையில் இந்த லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

25 பணியாளர்கள், 3 நாட்களாக இந்த பிரமாண்ட லட்டை தயாரித்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரசாதமாக அளிக்கும் பொருட்கள் அதிகளவில் அயோத்தியை நோக்கி வந்தவண்ணம் இருக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *