உலகின் மிகப்பெரிய “ஓம் வடிவ சிவன் கோவில்”… இன்று திறப்பு விழா!

தொலைவில், பாலி மாவட்டத்தில் ஜடான் கிராமத்தில், சுமார் 250 ஏக்கர் நில பரப்பளவில் பிரமாண்டமான சிவன்’ கோவில் கட்டுவதற்கு 1995ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பிரணவ மந்திரமான “ஓம்” வடிவில் கட்டப்பட்டிருப்பது இந்த கோயிலின் சிறப்பு.

இந்தியாவில் மட்டுமின்றி உலகில் வேறு எங்கும் சிவனுக்கு ஓம் வடிவத்தில் கோயில் கட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பிரம்மாண்டமான “ஓம்” வடிவிலான சிவன் கோவிலின் கட்டுமானப் பணிகள் கடந்த 27 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த நிலையில் தற்போது நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா இன்று பிப்ரவரி 10ம் தேதி நடைப்பெறுகிறது. இன்று முதல் பிப்ரவரி 19ம் தேதி வரை தொடந்து 10 நாட்கள் பூஜைகள் நடைப்பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட்ட ராமர் கோயிலுக்கு இணையாக இந்தக் கோயிலுக்கும் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *