உலகில் மிகப்பெரிய அரண்மனை: கட்டி முடிக்கவே 14 ஆண்டுகள்
ராஜஸ்தான் நகரில் ஜோத்பூர் மாவட்டத்தில் பிரமாண்டமான நிலப்பரப்பில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது. இந்த அரண்மனையில் மன்னர் காஜ் சிங் வாழ்ந்து வருகிறார்.
காஜ் சிங்யின் தாத்தாவின் பெயர் தான் இந்த அரண்மனைக்கு பெயராக வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் 1929ஆம் ஆண்டு ஆரம்பித்து 1943ஆம் தான் முடிக்கப்பட்டுள்ளது.
இந்திய கலைநயத்தை கலந்து இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும் இதைபற்றி சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உமைத் பவன் அரண்மனை
உலகில் மிகப்பெரிய அரண்மனையாகவுவம் சொகுசு அரண்மனையாகவும் காணப்படுகிறது. அந்த காலத்திலேயே 11 மில்லியன் ரூபாவில் இந்த அரண்மனை கட்டப்பட்டதாம்.
இங்கு மஹாராஜா உமைத் சிங் 4 ஆண்டகள் குடியேறி வெளியேறிய நிலையில் அவருக்கு பின் தற்போது இந்த அரண்மனையில் காஜ் சிங் வாழ்ந்து வருகிறார்.
இதில் மொத்தமதாக 347 அறைகள் உள்ளன. 1971 ஆம் ஆண்டு சொகுசு விடுதியாக இதை காஜ் சிங் மாற்றினார். இது 26 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது.
இந்த அரண்மனையில் தர்பார் அரங்கம், தனி உணவறைக் கூடங்கள், நூலகம், நீச்சல் குளம், ஸ்பா, 4 டென்னிஸ் மைதானம் உள்ளிட்டவை இந்த அரண்மனையில் உள்ளன.